யாருக்கும் பயந்து அதிமுக அரசியல் செய்யவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசத்துடன் பேசியுள்ளார். சிவகாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவினர் யாருக்கும் பணிந்தவர்கள் அல்ல. ஒரு சந்தர்ப்பத்தில் உதவி செய்தார்களே என்றுதான் நன்றிக்கடனுடன் பார்க்கிறோம்.

யாருக்கும் பயந்து அதிமுக அரசியல் செய்யவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசத்துடன் பேசியுள்ளார். சிவகாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவினர் யாருக்கும் பணிந்தவர்கள் அல்ல. ஒரு சந்தர்ப்பத்தில் உதவி செய்தார்களே என்றுதான் நன்றிக்கடனுடன் பார்க்கிறோம். ஆனால் அ.தி.மு.க.வை ஏளனமாக பார்ப்பவர்களை எதிர்க்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆணையிட்டால் யாரை வேண்டுமானாலும் எதிர்க்க அதிமுகவினர் தயாராக உள்ளோம் என்றார். காலம் காலமாக திமுகவை எதிர்த்துப் பழக்கப்பட்ட அதிமுக தொண்டர்களுக்கு நேற்று வந்தவர்கள் எம்மாத்திரம் என்று விமர்சனம் செய்துள்ளார். டிடிவி தினகரன் ஒரு கருத்தைக் கூறுவதும், அதற்கு மறுப்பு தெரிவித்தும், எதிர்த்தும் அதிமுக அமைச்சர்கள் கருத்து சொல்லி வருவது வாடிக்கையாக உள்ளது. 

மேலும் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் ஆட்சிக்கு வர விரும்புவதால், ஆட்சியில் உள்ளவர்களை விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றம் தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.