அதிமுகவை அழிக்க நினைப்பது கமல்தான் என்றும், அதனால்தான் அவரை விமர்சித்து வருவதாகவும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களிடம் கூறினார்.

மறைந்த ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். 

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதற்கு பிறகு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், காவிரி மேலண்மை வாரியத்தைப் பொறுத்தமட்டில், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதில், மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால அடுத்தகட்ட முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்றார். டிடிவி அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக தீர்ப்பு வந்தால், இரண்டு அணியும் ஒன்று சேருவது பற்றி மேல்மட்ட தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்றார்.

பின்னர், செய்தியாளர்கள், டீநங்கள் தொடர்ந்து கமல் ஹாசனை விமர்சனம் செய்து வருவது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல் தான், அதிமுகவை அழிக்க நினைக்கிறார். அவரை கருவிலே அழிக்காமல் விடமாட்டோம். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒவ்வாமையான
கருத்துக்களைத் தெரிவித்து வருபவர். கமல் தமிழக மக்களுக்கு பாடுபட மாட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கருணாநிதியால் செயல்பட முடியாத நிலை. அதனால் கமல் முதலமைச்சராக நினைக்கிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.