செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டுள்ளார்..! மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது- அமைச்சர் ரகுபதி பரபரப்பு புகார்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான தாக்குதல் முழுக்க முழுக்க மனித உரிமை மீறிய செயல். எதற்கும் ஒரு முறை உண்டு. அதிகாரம் இருப்பதால், எதையும் அத்துமீறி அவர்கள் செய்கிறார்கள். அந்த அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்கவரத்து துறையில் பணி வாங்கி தருவதாக மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரித்து அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் சோதனை நடத்திய நிலையில் நேற்று நள்ளிரவு உடல் நிலை பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாகத்துறை தெரிவித்தது. இந்தநிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் உதயநிதி, ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் சந்தித்தனர்.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்.? புதிய அமைச்சர் யார்.? வெளியான பரபரப்பு தகவல்
மனித உரிமை மீறல்- ரகுபதி கண்டனம்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இந்த அமலாக்கத்துறை சோதனை உள்ளது. இதற்கு யார் காரணமாக இருந்தாலும், அவர்கள் மக்கள் மன்றத்தின் முன் கட்டாயம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். நீதிமன்றத்தின் முன்பாகவும் கடைமைப்பட்டுள்ளார் என கூறினார்.
நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோமா இல்லையா என்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய தற்போது மருத்துவமனைக்கு கொண்டு சென்றது எல்லாம் முழுக்க முழுக்க மனித உரிமை மீறிய செயல். எதற்கும் ஒரு முறை உண்டு. அதிகாரம் இருப்பதால், எதையும் அத்துமீறி அவர்கள் செய்கிறார்கள். அந்த அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள் என அமைச்சர் ரகுபதி ஆவேசமாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
யார் இந்த செந்தில் பாலாஜி..? அரசியலில் நுழைந்து அமைச்சரானது எப்படி.? கடந்து வந்த பாதை...