ஆதாரம்  இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஊட்டச்சத்து பொருட்களில் முறைகேடு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாகவும், தகுதி இல்லாத நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருந்தார். இந்தநிலையில் டெண்டர் முறைகேடு தொடர்பாக விளக்கம் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாஜக மாநில அண்ணாமலை கர்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து மாவு குறித்து குற்றச்சாட்டு வைத்திருந்தார். ஊட்டச்சத்து பெட்டகம் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கான டென்டர் திறக்கப்பட்டு L1 யார் என்று முடிவு செய்திருக்கிறார்கள். பாலாஜி சர்ஜிகல் என்ற நிறுவனம் L1 ஆக வந்துள்ளது. அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ் கோட் என்ற நிறுவனம் L2 வாக வந்துள்ளது. எனவே அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படவில்லை. 

அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்

அண்ணாமலை கூறிய நபருக்கு டெண்டர் வழங்கப்படவில்லை. விதிகளுக்கு உட்பட்டு, மற்றொரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு கூறியதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பெட்டகத்தின் விலை 2018 டெண்டரில் 1996.41 ஆகும். தற்போது 2180.71 ரூபாய் என்பது டெண்டரில் வந்து குறைந்தபட்ச விலையாகும். கடந்த முறை ஆவின் நெய், ரூ.191.41க்கு கொடுக்கப்பட்டது. தற்போது ரூ 219.50க்கு வழங்கப்படுகிறது. அதையும் கூட குறைத்து கேட்க முயல்வோம். ஆவின் விலை 12.6% சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்டகத்தின் ஒட்டுமொத்த விலை 9.6% அதிகரித்துள்ளது. கடந்த முறைக்கும் தற்போதும் 150 ரூபாய் வித்தியாசம் உள்ளது. எனினும் கூட அந்த நிறுவனத்தினிடம் பேசி விலை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு ஆண்டில் 11 லட்சம் பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஐந்து பேர் டெண்டரில் பங்கேற்றுள்ளனர். ராமச்சந்திரன் என்ற ஒப்பந்ததாரருக்கு கிடைக்க வேண்டும் என்று தான் பாஜக அண்ணாமலை இதை செய்கிறார். அந்த நிறுவனம் technical bidல் தகுதியாகவில்லை என தெரிவித்தார்.