Asianet News TamilAsianet News Tamil

”ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது” - கமலை எச்சரிக்கும் கடம்பூர் ராஜு...!!!

Minister Kadambur Raju has warned that if Kamal Haasan does not stop talking he will be prosecuted
Minister Kadambur Raju has warned that if Kamal Haasan does not stop talking he will be prosecuted
Author
First Published Jul 16, 2017, 6:55 PM IST


நடிகர் கமலஹாசன் ஆதாரமில்லாமல் பேசி வருவதை நிறுத்திகொள்ளா விட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்துள்ளார்.

விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனால் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. சிஷ்டம் சரியில்லை என வாயை விட்டார்.

இதற்கு தமிழகத்தின் ஆளும் கட்சி அமைச்சர்கள் பொங்கி எழுந்து தமது கருத்துகளையும் எச்சரிக்கைகளையும் கமலுக்கு விடுத்து வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி திரேஸ் புரத்தில் பக்கிள் ஓடை தூர்வாரும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தற்போது நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு திரையுலகினர் 457 பேருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளதாகவும், இதனை பாராட்ட மனமில்லாத கமலஹாசன் ஆதாரமின்றி அரசு மீது குற்றம் சாட்டி வருவதாக தெரிவித்தார்.

அவர் உடனே இத்தகையான அவதூறு குற்றச்சாட்டுகளை நிறுத்தி கொள்ளா விட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் எனவும், கமலஹாசன் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios