அடுத்த குண்டை போட்டுடைத்த அமைச்சர்  ஜெயக்குமார்..! அடுத்து  என்னமோ..!?

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அமைச்சர் சிவி சண்முகம் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஜெயலலிதாவிற்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் என்றும்,  ஜெயலலிதாவிற்கு ஏன் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிக்க, சிலர் தடுத்து இருக்கிறார்கள் என்றும், எனவே ஜெயலலிதா மரணம் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவருடைய கருத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால்தான் ஒரு கோடிக்கு மேல் செலவு ஆகி உள்ளது என்றும், மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் தாங்கவில்லை என்றும், சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தங்கி இருந்ததாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அமைச்சர்களுக்குள் பிளவு எதுவும் இல்லை என்றும், பிளவை ஏற்படுத்தவும் முடியாது என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தின் ஜெயலலிதா குறித்த பேச்சும், அதற்கு வரவேற்பு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சும் இன்றைய அரசியலில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.