அதிமுகவை விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் விமர்சித்தால் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தாங்கமாட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார். 

மத்திய அமைச்சரவையில் அதிமுக இணைவதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி துக்ளக் இதழில் 9 ஆம் பக்கத்தில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இணைவதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி வெளிவந்திருக்கும் கேலிச்சித்திரம் அதிமுகவினரை மட்டுமல்ல தமிழகத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க வெளியே ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு, ‘உஸ்ஸ்... யாரும் அழப்படாது.

 

நம்பளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்’ என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல குறிப்பிட்டிருந்தது துக்ளக். அதாவது மத்திய அமைச்சர் பதவி வேண்டி அதிமுக பிச்சையெடுப்பது போலவும், மீதம் இருந்தால் பாஜக தரும் என்றும் மறைமுகமாகவெல்லாம் இல்லாமல் நேரடியாக சொல்லியிருந்தது. இந்த நிலையில் இதற்கு காட்டமாக பதிலளித்துள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா. இன்றைய நமது அம்மாவில் தரங்கெட்ட பத்திரிகையும் தரம்தாழ்ந்த விமர்சனமும் என்ற தலைப்பில் வெளியிட்டு விமர்சித்திருந்தது.  

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில் அதிமுகவை விமர்சனம் செய்வதை குருமூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். நாங்கள் விமர்சித்தால் அவர் தாங்க மாட்டர் என்றார். குருமூர்த்தி காழ்புணர்ச்சியோடு ஏன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. மேலும் அவர் பேசுகையில் இருமொழிக் கொள்கைதான் எங்கள் உயிர் என்றும், தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.