minister jayakumar talks about ops
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஒரு சந்தப்பவாதி என்றும் அதிமுக வை உடைக்க அவர் செய்யும் சதி எந்நாளும் நிறைவேறாது என நிதி அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

உலக பெண்கள் தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவ்வையார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சிலைக்கு மாலை அணிவித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சரியான சந்தர்ப்பவாதி என குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரும் மருத்துவமனையில் தான் இருந்தார். ஜெ, எப்படி இறந்தார் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அவருக்கு நன்றாக தெரியும் என குறிப்பிட்டார்.
ஆனால் தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றே ஒரே காரணத்துக்காக சந்தர்ப்பவாதத்துடன் அவர் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு உடனடியாக நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயகுமார் வலியுறுத்தினார்.
