மக்கள் விரும்பாத திட்டங்களுக்கும் தமிழக அரசு ஒருபோதும் ஆதரவு அளிக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

சென்னை ராயபுரத்தில் உள்ள கே.சி. சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தான் படித்த பள்ளி என்பதால் மேடையிலேயே மண்டியிட்டு வணங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார் வகுப்பறைக்கு சென்று பாடம் நடத்தினார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரும்பாத திட்டங்களுக்கும் தமிழக அரசு ஆதரவு அளிக்காது. தனிமரம் தோப்பாகாது என்ற நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இருக்கிறார். கருவேல மரம் போன்ற தினகரன் எதற்கும் பயன்பட மாட்டார் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.