ஆளும் அ.தி.மு.க. அணிக்கு எதிராக எத்தனையோ சரவெடிகளை கொளுத்திப் போட்டிருக்கிறார் தினகரனின் தளபதி வெற்றிவேல். ஆனால் சமீபத்தில் ’எம்.பி. ஒருத்தருக்கு தம்பி பாப்பா பொறந்திருக்குது. அப்போ எம்.பி.யோட அப்பாவுக்கு என்ன வயசுன்னு முடிவு பண்ணிக்கோங்க! அந்த குழந்தைக்கு  முறைப்படி சேரவேண்டிய சொத்தை பிரிச்சுக் கொடுத்திடுங்க. இல்லேன்னா ரகசியம் உடைபடும், சொல்லிட்டேன்.’ என்று ஒரு பயோலாஜிகல் அணுகுண்டை கொளுத்திப் போட்டார்.  

வெற்றிவேல் ஒரு அதார் உதார் பேர்வழிதான் என்றாலும் கூட, அவர் சொல்லும் கிசுகிசுக்களெல்லாம் அடுத்த சில வாரங்களில் ஆதாரத்துடன் நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது, இதனால் ‘யார் அந்த எம்.பி., தம்பி?’ என்று குழம்பியது தமிழகம். அதிலும்  ஆளும் அ.தி.மு.க. அணிக்குள் ‘இவரா? அவரா? அவருக்கு பொறந்தது பொண்ணுதானேய்யா? இவர்தான் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி க்ளீன் பண்ண வெச்சிட்டாரே?’ என்று தங்களுக்குள் பல ரகசியங்களை உடைத்துப் பேசி தலையை பிய்த்துக் கொண்டனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் இவர்களுடனேயே சேர்ந்து தன் பின் பாதி மண்டையை கசக்கிக் கொண்டார். 

இந்நிலையில், நேற்று வாட்ஸ் அப்பில் வைரலான அந்த ‘பிறப்புச் சான்றிதழ்’ தமிழக அரசியலை தெறிக்க விட்டிருக்கிறது. ஆம் தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கும் - ஜெ., சிந்து என்கிற பெண்மணிக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விபரம் சொல்கிறது அந்த அறிக்கை. கடந்த ஆகஸ்டு மாதம் 9-ம் தேதியன்று, சென்னை பழைய வண்ணாரபேட்டையில் உள்ள ஜெயம் நர்ஷிங் ஹோமில் இந்த குழந்தை பிறந்துள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் அந்த அறிக்கையின் மூலமாக வெளிப்படுகின்றன. 

ஜெ., மரணித்த நாளில் இருந்து இதுவரையில் அ.தி.மு.க. மீதான எந்த விமர்சனத்துக்கும் முந்திரி கொட்டையிலும் முந்திரி கொட்டையாக முன்னே வந்து நின்று தாட்பூட் தடால் புடால் என்று பேட்டி தட்டுவதும், தினகரன் ஸ்டாலின் உள்ளிட்டோரை கன்னாபின்னாவென விமர்சனத்தில் கசக்கிப் பிழிவதும் ஜெயக்குமாரின் வாடிக்கை. ஆனால் இன்று இப்படியொரு விஷயம் வெளிப்பட்டதில் மனிதர் அப்படியே அமுங்கிப்போய் விட்டார்.

 

ஆக வெற்றிவேல் அன்று சொன்ன ‘தம்பி பாப்பா’ என்பது ஜெயக்குமாரின் குழந்தையைத்தான்! என்கிறார்கள் விமர்சகர்கள். சரி, ஜெயக்குமாரின் மகன் எப்போது எம்.பி.யானார்? என்று கேட்டால், ‘அட அது தென்சென்னை எம்.பி.ஜெயவர்தன் என்பது கூடவா தெரியாது, ஜெயக்குமார் பற்றிய ரகசியத்தின் ஆதாரம் தன் கையில் இருக்குதுங்கிறதை ஜெயக்குமார் மட்டுமே புரிஞ்சுக்கிற மாதிரி இப்படியொரு ட்விஸ்ட்டு வெச்சு வெற்றி பேசினார்.

 

அதுக்குப் பிறகாவது ஜெயக்குமார் நாவடக்கம் காட்டியிருக்கலாம், ஆனா அவரு என்ன நினைப்பிலோ தன் வேலையை தொடர்ந்துட்டே இருந்தார். இப்போ சிக்கிட்டார்!” என்கிறார்கள். இந்த வேளையில் தினகரன் தரப்போ “எங்கள் தலைவர் தினகரன் நாகரிகம் தெரிந்தவர். அவர் நினைத்திருந்தால் வெற்றிவேல் மூலமாக அன்றே இந்த அறிக்கையை வெளியிட்டு ஜெயக்குமாருக்கு எதிராக ஒரு பூகம்பத்தை கிளப்பி, இந்த ஆட்சியின் அமைச்சரவையை நக்கலுக்கு ஆளாக்கியிருக்க முடியும். ஆனால் அதை செய்யாதவர் தினகரன்.” என்று புகழ் பாடுகிறார்கள். வெளங்கிடும்!