சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு இரண்டாவது இன்னிங்சுக்கு அரசியல் அரிதாரம் பூசி வந்துள்ளனர் இருவர். அதில் ஒருவருடைய பேச்சே புரியவில்லை... இன்னொருவருக்கு அவருடைய பாதையே தெரியவில்லை என்று கமல், ரஜினி ஆகியோரை ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு இரண்டாம் இன்னிங்சில் அங்கு ஜெயிக்க முடியாது என்ற நிலைக்கு வந்த பிறகு, அரசியல் அரிதாரம் பூசி வந்திருக்கிறார்கள். 

ஒரு சிலர். ஒரு முடிவை உருப்படியாக எடுக்கத் தெரியாமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களை ஏமாற்றி வருபவர்தான், எம்.ஜி.ஆர். ஆட்சியை தர முடியும் என்று எகத்தாளம் பேசி வருகிறார். தன் சொத்துக்களை நாட்டு மக்களுக்கு வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர். வாடகை கட்டுவதை நீதிமன்ற வழக்குகளை சந்திப்பவர்கள் எம்.ஜி.ஆர். பற்றி பேசக்கூடாது. 

எப்போ வருவேன்... எப்படி வருவேன்னு தெரியாது... என்கிறார் ஒருவர். உன்னோட பாதையே உனக்கு தெரியல... தமிழ்நாட்டுக்கு என்ன வேணும். எப்ப வேணும். எவ்வளவு வேணும் அதை மட்டும் எப்போ தெரிஞ்சுப்பே. அதை முதல்ல தெரிஞ்சுக்க... போலி காவி வேஷம் போட்டு பசுத்தோல் போர்த்திய புலியாக வலம் வருவதை மக்கள் நன்கறிவார்கள். இன்னொருவர் என்ன பேசுகிறார் என்பதே புரியவில்லை. தனியாக டிக்ஷனரி கொண்டுதான் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஒருவர் மய்யமாக வந்து நிற்கிறார். 

மய்யம் என்றால் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.இத்தனை வருஷமா இதே ஊர்லில் இருந்துவிட்டு, சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, சுயநலத்துக்காக கட்சி ஆரம்பிக்குற உங்களுக்கு எல்லாம் கருத்து சொல்கிற தகுதி கொஞ்சம் கூட கிடையாது. ஆனாலும் விமர்சனம் பண்றீங்க...மக்கள் பிரச்சனை என்ன தெரியுமா... அவர்களுடன் தெருவில் இறங்கி நடந்திருக்கிறீர்களா? அரசியலில் உங்களோட ஆக்டிங் ஒருபோதும் எடுபடாது என்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார்.