திமுகவில் அடுத்து யாரெல்லாம் சிக்குவார்கள் என 2 நாட்களில் தெரியுமென்று அமைச்சர் ஜெயக்குமார் ஒரு குண்டு போட்டுள்ளார்.

திமுகவில் அடுத்து யாரெல்லாம் சிக்குவார்கள் என 2 நாட்களில் தெரியுமென்று அமைச்சர் ஜெயக்குமார் ஒரு குண்டு போட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "வருமானவரித்துறை மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இல்லை...கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனை நடத்துகின்றனர். வருமானவரித்துறை சோதனை விவகாரத்தில் அரசியல் நோக்கம் இல்லை...எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன என்று எங்களுக்கு தெரியும். பணம் கொடுப்பதில் எங்களுக்கு எந்த உடன்பாடும் இல்லை.

இப்போது கைப்பற்றப்பட்ட பணம் வெறும் ஜுஜுபி..முழுமையாக சோதனை நடத்தினால் 10,000 கோடி கிடைக்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 100 கோடி ரூபாய் செலவு செய்ய திமுக திட்டமிட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் வருமானவரித்துறை திறம்பட செயல் படுகிறது. திமுக பணம் கொடுத்தாலும் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெற முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

அதில் மிக முக்கியமாக, திமுகவில் அடுத்து யாரெல்லாம் சிக்குவார்கள் என 2 நாட்களில் தெரியும் என அமைச்சர் ஜெயக்குமார் ஒரு குண்டு போட்டுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துரைமுருகன் மற்றும் அவருடைய மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரி மற்றும் திமுகவின் முக்கிய புள்ளிகள் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று பல கொடி ரூபாயை கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டு வரும் இந்த சமயத்தில், அடுத்த 2 நாட்களில் சிக்க போகும் திமுகவினர் என அமைச்சர் முன்கூட்டியே தெரிவித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கபப்டுகிறது. 

இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலையடுத்தே வேலூரில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது என சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.