minister jayakumar criticize opposition leader stalin

தூங்கி எழுந்தாலே இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றுதான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்லுவார் என அவரை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகிலிருந்தே இன்னும் 3 மாதத்தில் ஆட்சி கலைந்துவிடும், 6 மாதத்தில் கலைந்துவிடும் என்று ஸ்டாலின் கூறிவருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஓராண்டை நிறைவு செய்துவிட்டது. ஆனால், இன்னும் அதே கருத்தை தான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தூங்கி எழுந்தாலே ஆட்சி நீடிக்காது என்றுதான் ஸ்டாலின் சொல்லுவார். முதல்வராக வேண்டும் என்ற கனவுலகில் சஞ்சரிக்கும் மாய மனிதர் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தும் என தெரிவித்தார்.