minister jayakumar criticize dinakaran

தினகரன் எப்போது ஜோதிடரானார்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்து தினகரனை ஓரங்கட்டிவிட்டனர். இதனால் பழனிசாமி அணியும் தினகரன் அணியும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். இரட்டை இலை மீட்கும் முயற்சியிலும் இரண்டு அணிகளும் தீவிரமாக உள்ளன.

இந்நிலையில், வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பழனிசாமி தலைமையிலான ஆட்சி கலையும் என தினகரன் விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆட்சி கலையும் என கூறிவரும் தினகரன் எப்போது ஜோதிடரானார் என கேள்வி எழுப்பியதோடு தற்போது தினகரன் ஜோதிடர் வேலைதான் பார்த்துவருவதாகவும் தெரிவித்தார்.