minister jayakumar challenges opposition leader stalin
அதிமுக ஆட்சியை கமிஷன் ஆட்சி என விமர்சிப்பதை விடுத்து ஆதாரம் இருந்தால் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியை கமிஷன் ஆட்சி என விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


எனவே ஊழல் நடைபெறுகிறது என பொதுவாக விமர்சிப்பது சரியல்ல. குறிப்பிட்டு எதில் ஊழல் நடக்கிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அதைவிடுத்து பொதுவாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருந்தால், நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடரட்டும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
