விழுப்புரம் மாவட்டத்தில் அரசியலில் பரபரப்பு மிக்க பேரூராட்சியாக செஞ்சி உள்ளது. இதில், செஞ்சி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 17 வார்டுகளை திமுகவும், ஒரே ஒரு வார்டில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இதில், 7வது வார்டில் வெற்றி பெற்ற அமைச்சரின் மகன் மொக்தியார் மஸ்தான் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
செஞ்சி பேரூராட்சியில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் மஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து அப்பா வழியில் பேரூராட்சி தலைவராக மகன் பொறுப்பேற்க உள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், 21 மாநகராட்சி, 135 நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வரலாறு காணாத வகையில் திமுக வெற்றி பெற்றது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசியலில் பரபரப்பு மிக்க பேரூராட்சியாக செஞ்சி உள்ளது. இதில், செஞ்சி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 17 வார்டுகளை திமுகவும், ஒரே ஒரு வார்டில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இதில், 7வது வார்டில் வெற்றி பெற்ற அமைச்சரின் மகன் மொக்தியார் மஸ்தான் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். தற்போது இவர் திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

செஞ்சி பேரூராட்சியை பொறுத்தவரை கடந்த 1986ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடந்த 5 தேர்தலிலும் தி.மு.க. சார்பில் தற்போது அமைச்சராக உள்ள செஞ்சி மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார். தனது தந்தையை போல பேரூராட்சி தலைவராக மொக்தியார் மஸ்தான் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மொக்தியார் அலி, உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் கிட்டதட்ட அவர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாகவே கூறப்படுகிறது.செஞ்சி பேரூராட்சியை 6வது முறையாக திமுக கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
