இன்று சட்டப்பேரவை மானியக்கோரிக்கையில் பங்கேற்க உள்ள எம்.எல்.ஏக்களுக்கு பரிசாக கொடுக்க தலப்பாக்கட்டு பிரியாணி பெட்டிபெட்டியாய் கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவதாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கு பெற்றும் எம்.எல்.ஏக்களுக்கு அந்தத் துறை அமைச்சர்கள் தினமும் ஒவ்வொரு பரிசுகளை அளித்து திணறிடித்து வருகின்றனர். 

அந்த வகையில் இன்று உணவுத்துறை மீதான விவாதம் நடந்து வருகிறது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏக்களுக்கு பரிசளிக்க தலப்பாக்கட்டு பிரியாணியை பெட்டி பெட்டியாய் கொண்டு வந்து சேர்த்து வருகிறார். திங்கட்கிழமை வனத்துறை மீதான விவாதம் நடைபெற்ற போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலப்பாகட்டு பிரியாணியை எம்.எல்.ஏக்களுக்கு வழங்கினார். 

அன்றே சுற்றுச்சூழல் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் முடிந்த பின்னர் அமைச்சர் கே.சி.கருப்பணன் அனைவருக்கும் விலையுயர்ந்த சூட்கேஸ்களை வழங்கி அசரடித்தார். நேற்று பள்ளிக்கல்வி துறை மீதான விவாதம் முடிந்த பிறகு அமைச்சர் செங்கோட்டையன் விலையுயர்ந்த சூட்கேஸ்களை பரிசாக வழங்கினார். தினமும் பரிசு மழையில் எம்.எல்.ஏக்கள் நனைந்து வருகின்றனர்.