வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.  

கடந்த 13ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானதையடுத்து, நேரில் சென்று ஆறுதல் சொல்ல தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி, முதல்வர் பழனிசாமி, மருத்துவமனை சென்று அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்து வந்தார். இதனையடுத்து, இன்று அதிகாலை அவருக்கு  தீவிராக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுள்ளார். பின்னர், எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உடனிருந்தனர்.