அதிமுக கூட்டணி கட்சிக்கு தாரைவார்க்கப்பட்ட விழுப்புரம் தொகுதியில் கடைசி கட்ட பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. பாமகவில் வடிவேல் ராவணணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரும் டஃப் பைட் கொடுத்து வருகின்றனர். 

மாவட்ட அமைச்சரான சி.வி. சண்முகம் முதலில் சற்று தயங்கி இருந்தாலும் பின்னர் ராமதாஸ், அன்புமணி நேரடியாக கேட்டுக்கொண்டதால் இறங்கி அடிக்க தொடங்கிவிட்டாராம். குறிப்பாக தலித் ஓட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளில் சற்று பாமகாவுக்கு பின்னடைவு காணப்படுகிறதாம். இதை எல்லாம் சரி கட்டும் வகையில் நேடியாக களத்தில் குதித்து செய்ய வேண்டியதெல்லாம் செய்து தூக்கி நிறுத்தி வருகிறாராம். 

அந்த வகையில் டாக்டர் ராமதாஸ் ரொம்பவே நெகிழ்ந்து போயி உள்ளாராம். ஜென்ம விரோதிகளாக சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தாலும் இதை கவனத்தில் கொள்ளாமல் பாமக வேட்பாளரான வடிவேல் ராவணனுக்கு சி வி ஷண்முகம் செய்யும் வேலையை பார்த்து, ராமதாஸின் மகள் கவிதா அவருடைய மனைவி சரஸ்வதி ஆகியோர் கட்சியினரிடம் மனம்விட்டு பாராட்டினார்களாம். இதேபோன்று தான் கள்ளக்குறிச்சியில் சுதீசுக்கு சி.வி சண்முகம் செய்து வரும் வேலையை பார்த்து பிரேமலதா நெகிழ்ந்து போயிள்ளாராம்

 

தம்பி ஒருபுறம் விழுப்புரம் பகுதியில் இறங்கி தாறுமாறு செய்துகொண்டிருக்க. அவரது அண்ணணும் அதிமுக நியூஸ் ஜெ டி.வி. எம்.டி.யுமான ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் எடப்பாடியே ஒரு ஸ்பெஷல் அசைன்மெண்ட் கொடுத்துள்ளராம். திருப்போரூர் இடைத்தேர்தலில் முகாமிட்டு அதிமுகவுக்கு வெற்றி கனியை பறித்து வருவது தான் அந்த அசைன்மெண்டாம்

முதலமைச்சர் கூறியதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆறுமுகத்திற்கு கடந்த 10 நாட்களாக முகாமிட்டு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார். கடும் போட்டி நிலவும் திருப்போரூர் இடைத்தேர்தல் மற்றும் விழுப்புரம், ஆரணி, கள்ளக்குறிச்சி எம்.பி தேர்தகளில் எப்படியாவது வெற்றி கனியை பறிக்க வேண்டும் என சகோதரர்கள் இருவரும் இறங்கி அடித்து வருகின்றனர். இவர்களது விடா முயற்சி வெற்றி பெறுமா என்று மே 23-ம் தேதி தெரியவரும்.