காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகக்த்தில் நலத்தீட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார். அரசு விழா என்பதால் அந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தியும் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் பேசிய புகழேந்தி , மதுராந்தகத்தில் சிப்காட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக நிலத்தை நீங்கள் தான் ஒதுக்கித் தர வேண்டும். திமுகவில் இருந்தாலும் நானும் மக்கள் பிரதிநிதிதான்.

எனவே எனது கோரிக்கையை தயவு செய்து அமைச்சர் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், பெஞ்சமினை புகழத் தொடங்கினார்.

கர்த்தராகிய ஏசுவின் மறு உருவமே உங்களிடத்தில் வைக்கும் விண்ணப்பத்தைக் கேட்டருளும் என கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர், பரிசும்ம ஆவியானவரே கொஞ்சம் மனம் இரங்குங்கள் என கெஞ்சும் வகையில் பேசினார். அவரின் பேச்சை அங்கிருந்தவர்கள் ரசித்துக் கேட்டதுடன் சிரித்து மகிழ்ந்தனர்.