DMK : புகார் அளிக்க வந்த பொதுமக்களை கையால் அமைச்சர் அடிக்க முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தின் பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரியின் புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துக்கொண்டு ரூ.8 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை அடிக்கல் நாட்டினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிறகு அங்கு ராமானுஜபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், குளம் சீரமைப்பு தொடர்பாக அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் புகார் மனு அளித்து, பொதுப்பணி துறை சார்பாக விடப்படும் ஏலம் வேண்டாமென்று கோரிக்கை வைத்தனர். கிராம மக்கள் சார்பாக விடப்படும் ஏலத்தை செயல்படுத்த என்று கோரிக்கை விடுத்து பேசிக்கொண்டிருந்தப்போது, அமைச்சர் தா.மோ அன்பரசன் சற்றும் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கோரிக்கை வைக்க வந்திருந்த பொதுமக்களுள் ஒருவரை தனது கையை ஓங்கிக்கொண்டு, "ஏய் அடிப்பேன்" என்று கூறியபடி அடிக்க முற்பட்டார்.

Scroll to load tweet…

அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள், திமுக கட்சியினர் எனப் பலரும் உடனிருந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையை ஏற்படுத்தியதோடு காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது புகார் அளிக்கவந்துவிட்டு புகாரை முறையாக கூறாமல் தங்களுக்குள் மாற்றி மாற்றி பேசிக்கொண்டால் யாருக்குதான் கோவம் வராது. அந்த வகையில் தான் அமைச்சர் உரிமையாக கையை ஓங்கி அதட்டியதாகவும் பொதுமக்கள் புரிந்து கொள்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க : Vikram: பத்தல, பத்தல..விக்ரம் படத்துக்கு சவுண்ட் பத்தல.! கடுப்பான ரசிகர்கள்.. தியேட்டரில் ரகளை !

இதையும் படிங்க : பெண்கள் ஹாஸ்டலில் ரகசிய கேமரா..1,000க்கும் மேற்பட்ட வீடியோஸ்.. சிக்கிய ஹார்ட் டிஸ்க்.! போலீஸ் ஷாக் !