Asianet News TamilAsianet News Tamil

லட்சக்கணக்கான காலவதியான மருந்துகள்.. திரும்பப்பெற மருந்து நிறுவனங்களுக்கு மருத்துவ பணிகள் கழகம் உத்தரவு.

கடந்த 2018 முதல் ஏப்ரல் 2021 வரை  தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் பல மருந்து சேமிப்பு கிடங்குகளில் காலாவதியாகி இருப்பதும்,

Millions of expired drugs .. Medical Services Corporation orders drug companies to withdraw.
Author
Chennai, First Published Aug 4, 2021, 10:15 AM IST

அரசு மருத்துவமனைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட காலாவதியான மற்றும் தரமற்ற லட்சக்கணக்கான மருந்துகளை திரும்பப்பெற நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறை வசம் மாவட்ட வாரியாக உள்ள காலாவதியான மருந்து மற்றும் தரமற்ற  மருந்து வகைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திரும்பப் பெற தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

Millions of expired drugs .. Medical Services Corporation orders drug companies to withdraw.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 24 மருத்துவ கல்லூரிகள் , அரசு மருத்துவ கல்லூரியுடன் இணைந்த 50 மருத்துவமனைகள் , 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் , 273 தலுகா மருத்துவமனைகள் , 1806 ஆரம்ப சுகாதார மையம் , 8713 துணை சுகாதார மையம் மற்றும் 15 நகர்புற சுகாதார மையம் என அரசின் மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து வகைகள் மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வது வழக்கம். அந்த வகையில் 315 அத்தியாவசிய மருந்துகள் ,366 அறுவை சிகிச்சை மற்றும் நுகர் பொருட்கள் ,517 சிறப்பு மருந்துகள் என  தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் மருத்துகள் கொள்முதல் செய்யப்படுகிறது. 

Millions of expired drugs .. Medical Services Corporation orders drug companies to withdraw.

குறைந்தபட்சம் 3 மாதம் இருப்பு மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் மாவட்ட வாரியாக 32 சேமிப்பு கிடங்குகளில் மருந்துகள் சேமித்து வைக்கப்படுகின்றன. கடந்த 2018 முதல் ஏப்ரல் 2021 வரை  தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் பல மருந்து சேமிப்பு கிடங்குகளில் காலாவதியாகி இருப்பதும், தரமற்று இருப்பதும் தெரியவந்ததை தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மருந்துகளை திரும்பப்பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாவட்ட வாரியாக செயல்படும் மருந்து சேமிப்பு கிடங்குகளில் தொடர்ந்து இருப்பு வைக்கப்படும் காலாவதியான மருந்து வகைகள் காரணமாக புதிய மருந்துகளை முறையாகச் சேமித்து பராமரிக்க முடியாத சூழல் நிலவுவதாகவும், 

Millions of expired drugs .. Medical Services Corporation orders drug companies to withdraw.

எனவே சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் வரும் 15ஆம் தேதிக்குள் மாவட்ட வாரியாக மருந்து சேமிப்பு கிடங்குகளில் தரமற்று  காணப்படும் மருந்து வகைகளை அரசின் கொள்முதல் விலை படி உடனடியாக திரும்பப் பெறவும், தவறும் பட்சத்தில் தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் சம்பந்தப்பட்ட மருந்து வகைகளை பாதுகாப்பான முறையில் அழித்திட தேவையான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2018 முதல் 2021 வரை வாங்க பட்ட மருந்துகள் மாவட்டவாரியாக லட்சகணக்கில் தர மற்றும் காலாவதியாகியும் உள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios