தமிழிசைக்கு அன்றே சொன்னார் "எம்ஜிஆர்"..!  வெளிவந்து 45 வருட ரகசியம்..!   

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசையை நியமனம் செய்ததற்கு தொண்டர்களிடம் இருந்து தொடர் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழிசை அவர்களுக்கு தொடர்ந்து மீம்ஸ் போட்டு கலாய்ப்பதும் தமிழகத்தில் தாமரை என்றுமே மலராது என நக்கல் அடிப்பதுமாக இருந்த தருணம் மாறி "அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட்" என்ற அளவிற்கு மிக உயரிய பதவியாக தெலுங்கானா ஆளுநர் பதவியை வழங்கி கௌரவித்துள்ளது உள்ளது பாஜக. 

ஆளுநராக நியமனம் அறிவிப்பு வெளியான ஞாற்றுக்கிழமை முதலே மூன்று நாட்களாக   சமூகவலைதளங்களில் தமிழிசை பற்றிய செய்தி தான் மிக அதிகமாக பார்க்க முடிகிறது. இந்த நிலையில் அவர் தன்னுடைய சிறுவயதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படத்தை தாண்டி ஒரு சில சுவாரஸ்ய நிகழ்வுகளும் வெளிவந்துள்ளது. அதனை தமிழிசை அவர்களே சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 

தமிழிசை சவுந்தரராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி இவர்கள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஓமந்தூரார் தோட்டம் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். எந்த ஒரு அரசியல் நிகழ்வாக இருந்தாலும் கலைவாணர் அரங்கில் தான் அப்போது  நடக்கும். அடிக்கடி தன் 
தந்தையுடன் நிகழ்ச்சிக்கு செல்லும் தமிழிசை அரசியல் தலைவர்கள் பேசும் பேச்சுக்களை மிகவும் ஆர்வமாக கவனிப்பாராம்.

மாபெரும் காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மகள் தமிழிசை என்பதால் மிக எளிதாக அனைத்து தலைவரிடமும் அறிமுகம் பெறக்கூடிய நபராக இருந்தார் தமிழிசை. மேலும் தமிழிசை என பெயர் சூட்டிய குமரி அனந்தனிடம் கலைஞரும் எம்ஜிஆரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர். தமிழ் மீது தாங்கள் கொண்டிருக்கும் அளவற்ற அன்பு, தாய்மொழி மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக உனக்கு தமிழிசை என பெயர் சூட்டி உள்ளார் உன் தந்தை. உன் தனத்தை  போலவே அரசியல் ஆளுமை மிக்க தலைவராக நீ வரவேண்டும் என எம்ஜிஆர் அவர்கள் தமிழிசையை பார்த்து அன்றே கூறி ஆசீர்வாதம் செய்தாராம்.

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று சாத்தியமாகி உள்ளது என அனைவரையும் நினைக்க வைக்கிறது இந்த புகைப்படம். இது தொடர்பான சில சுவாரசிய தகவல்களை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார் தமிழிசை சௌந்தரராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் தமிழிசை பற்றிய ஒரு சுவாரசிய விஷயமும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.