அந்த ஜெயலலிதாவே வந்து மத்தியஸ்தம் செய்து வைத்தாலும் கூட அமைச்சர் ஜெயக்குமாருக்கும், தினகரனுக்கும் இடையிலுள்ள பனிப்போர் உருகாது போலிருக்குது. இரண்டு தரப்பும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாளெடுத்து செருகுகின்றன பரஸ்பரம். அதுவும் சாதாரண வாளில்லை, சொரசொரன்னு விஷம் தோய்க்கப்பட்ட வாளை எடுத்து மாற்றி மாற்றி சொருகிக் கொள்வதுதான் கொடுமையே.
அந்த ஜெயலலிதாவே வந்து மத்தியஸ்தம் செய்து வைத்தாலும் கூட அமைச்சர் ஜெயக்குமாருக்கும், தினகரனுக்கும் இடையிலுள்ள பனிப்போர் உருகாது போலிருக்குது. இரண்டு தரப்பும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாளெடுத்து செருகுகின்றன பரஸ்பரம். அதுவும் சாதாரண வாளில்லை, சொரசொரன்னு விஷம் தோய்க்கப்பட்ட வாளை எடுத்து மாற்றி மாற்றி சொருகிக் கொள்வதுதான் கொடுமையே.
அந்த வகையில் சமீபத்தில் தினகரனை வழக்கமான தன் சவடால் வார்த்தைகளில் அமைச்சர் ஜெயக்குமார் வறுத்துத் தள்ளிட, பதிலுக்கு அமைச்சரே அலறிடுமளவுக்கு அந்த விஷயத்தை வேறு லெவலில் முடிச்சுப் போட்டு தினகரன் டீம் தீயை கிளப்பியிருப்பதுதான் ஹைலைட்டே. அப்டி என்ன சொல்லிட்டார் அமைச்சர்?... 
“தினகரனையெல்லாம் ஏன் பலசாலின்னு சொல்றீங்க! அவருக்கு கூடுற கூட்டத்தை வெச்சு சொல்றீங்களா? அட அது பணம் கொடுத்துக் கூட்டுற கூட்டம். எங்க கட்சியின் சின்னமான் ரெட்டை இலைக்கு ஓட்டுப்போட்ட கை வேறு எந்த சின்னத்துக்கும் ஓட்டு போடாது. ஒண்ணு சொல்லட்டுமா, தினகரன் அ.தி.மு.க.வின் வாக்குகளை பிரிச்சுடுவார், பிரிச்சுடுவார்ன்னு சொல்றது மிக தவறான கணிப்பு. நிச்சயமா அவரால் எங்களோட வாக்கு வங்கியை எதுவுமே பண்ண முடியாது. 
அவரு பணத்தை வெச்சு விளையாடுறார், ஆளுமையான தலைவரும் இல்லை, தனிக்கட்சி ஒன்றை வெற்றிகரமாக நடத்துமளவுக்கு திறமையானவரும் இல்லை. வெற்று வாய், பொய்ப் பேச்சு, பிம்பத்தை உருவாக்கும் வார்த்தை ஜாலங்கள்! இவ்வளவுதான் தினகரன். இருபது ரூபாய் டோக்கன் கொடுத்து ஆர்.கே.நகர் மக்களை ஏமாத்தினார். அதே மாதிரி மீண்டும் மக்கள் ஏமாறுவாங்கன்னு நினைச்சு பேசிட்டு இருக்கார். வாய்ச்சவடால் பேர்வழி. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சொல்வது மாதிரி..வாய்தான் அவருக்கு காது வரைக்கும் உள்ளது. அதிலிருந்து வருவதும் பொய், பொய். நிலைக்கமாட்டார், சீசன் முடிந்ததும் பறந்துவிடும் பறவையைப் போல இந்த தேர்தல் முடிந்ததும் காணாமல் போயிடுவார்.” என்று போட்டுத் தாக்கிவிட்டார்.

இதைப் பார்த்து, வார்த்தைக்கு வார்த்தை தன்னை வம்பிழுத்து, தராதரம் இல்லாமல் ஜெயக்குமார் பேசிவிட்டதாக செம்ம டென்ஷனாகிவிட்டார் தினகரன். பதிலுக்கு ஜெயக்குமாருக்கு ஏதாவது ரிவிட் அடித்தே தீருவது என்று ஸ்கெட்ச் போட்ட தினகரன் டீம்....”அம்மா மரணத்துக்குப் பின் ஜெயக்குமாருக்கு ஓவர் தெனாவெட்டாகி போய்விட்டது. ‘ஆயிரத்தில் ஒருவன் படம் போல் வெறும் வாய்தான் காது வரைக்கும் இருக்குது. வாய்ச்சவடால்தான் வேறு ஒண்ணும் கிடையாது.’ அப்படின்னு தலைவர் படத்தையே கிண்டல் விட்டு சொல்ற அளவுக்கு தில்லாகிட்டார். இவரையெல்லாம் அடக்கி ஓரங்கட்டி அரசியலில் அடையாளம் இல்லாமல் ஆக்கிடணும்!” என்று தங்களின் சமூக வலைதளங்களில் கொக்கரித்துள்ளது தினகரன் டீம். பார்க்கலாம்! பார்க்கலாம்!
