ஓ.பி.எஸ். பேசும்போது, எம்.ஜி.,ஆர் நூற்றாண்டை அம்மா அவர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி 31 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்த முடிக்கப்பட்டு, நிறைவாக சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. எனக்கு கிடைத்த தகவல்படி சென்னை மாநகரமே குலுங்கியது. 10 லட்சம் பேர் சென்னை மாநகரத்தில் கூடி எம்.ஜி.ஆருக்கு சிறப்பு செய்திருக்கிறார்கள்.

 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் சென்னை வந்தனர். நேற்று நள்ளிரவில் இருந்து வந்தவண்ணம் உள்ளனர். இதனால் போக்குவரத்தில் கடும் நெரில்சல் ஏற்பட்டது. இதனால், அச்சரப்பாக்கத்தில் இருந்து மதுராந்தகம் வரையும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மேலும், தாம்பரத்தில் இருந்து கிண்டி, சைதாப்பேட்டை, மெரினா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வருகிறது. இந்த நிலையில், எம்.ஜி.,ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தனக்கு வந்த தகவலின்படி சென்னை மாநகரமே குலுங்கியது என்றும், சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பெட்டோர் சென்னை மாநகரத்தில் கூடி எம்.ஜி.ஆருக்கு சிறப்பு செய்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.