உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கௌசல்யாவின் தந்தைக்கு விடுதலை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.இந்த விடுதலை தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் கிளம்பி இருக்கிறது.

 கடந்த 2015-ஆம் ஆண்டு தெற்கு தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் குப்பமபாளையம் கிராமத்தை சேர்ந்த கௌசல்யா  தனது பெற்றோர் விருப்பத்தை மீறி சங்கர் என்பவரை சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டார். கௌசல்யாவின் கல்லூரி நாள் தோழரான சங்கர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இதன் காரணமாக கௌசல்சாவின் குடும்பத்தார் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சங்கர் கௌசல்யா திருமணம் கோயிலில் வைத்து ரகசியமாக நடைபெற்றது.

திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு, கௌசல்யாவின் தந்தையான சின்னசாமி, தம்பதியரை வலுக்கட்டாயமாக பிரிக்க முயன்றார். கௌசல்யாவின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி அவரை திண்டுக்கலுக்கு அழைத்துச் சென்றார். இதனிடையே சின்னசாமி கூலிப்படை உதவியுடன் 2016-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து சங்கரை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கௌசல்யாவின் தந்தை உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில் தான் பரபரப்பான தீர்ப்பு வெளியானது. கௌசல்யாவின் தந்தை சின்னாமி விடுதலை என்று... இது குறித்து கமல்ஹாசன் தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

"உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.முக்கியக் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி பல்வேறு தரப்பினர் கடுமையான கருத்துகளை முன் வைத்துள்ளனர்.அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.. ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை.தமிழகத்தையே உலுக்கிய கொலையில் முக்கிய குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?  என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.