கூட்டணி கட்சி எம்பியை தட்டி தூக்குகிறதா திமுக..? வெளியான பரபரப்பு தகவல்

மதிமுக பொருளாளராக இருக்கும் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மதிமுகவில் இருந்து திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Member of Parliament Ganeshamurthy has denied reports that he is joining DMK from Madhyamik

துரை வைகோவிற்கு தலைமை பொறுப்பு

திமுகவில் வாரிசு அரசியலை நுழைப்பதாக கூறி அந்த கட்சியில் இருந்து வெளியேறியவர் வைகோ, இதனையடுத்து மதிமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பல்வேறு தேர்தல்கள் நேரத்தில் வைகோ எடுத்த அவசரம் மற்றும் ஆத்திரத்தால் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலையானது ஏற்பட்டது. இதன் காரணமதாக கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் மதிமுகவில் தனது மகன் துரை வைகோவிற்கு தலைமை பொறுப்பு வழங்கினார். இதற்கு அந்த கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர் கொடி தூக்கினார்.

Member of Parliament Ganeshamurthy has denied reports that he is joining DMK from Madhyamik

அதிருப்தியில் மதிமுக மூத்த தலைவர்கள்

அப்போது திமுகவோடு மதிமுகவை இணைத்து விட வேண்டியது தானே என தெரிவித்தனர். குறிப்பாக மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடும் விமர்சனம் செய்து வருகிறார்.  இந்தநிலையில் மதிமுக உட்கட்சி தேர்தலானது நடைபெற்று வருகிறது. தற்போது பொருளாளராக இருக்கும் ஈரோடு எம்பி கணேஷமூர்த்தியின் பதவி ம.தி.மு.க நிர்வாகிகள் தேர்தல் ஜுன் 1ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பொருளாளர் பதவி பறிக்கப்படக்கூடும் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் கணேஷ மூர்த்தி இணைய இருப்பதாக கூறப்பட்டது.

Member of Parliament Ganeshamurthy has denied reports that he is joining DMK from Madhyamik

திமுகவில் இணைகிறேனா.?

இந்த தகவல் மதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதிமுகவின் மூத்த தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக கட்சியில் இருந்து வெளியேறுவது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், எந்த காரணத்திற்காகவும் ம.தி.மு.க-விலிருந்து தான் விலகப்போவதில்லை என்றும், எந்த மாற்று கட்சியிலும் இணையப்போவதில்லை என கணேஷ மூர்த்தி தெரிவித்துள்ளார். யார் எந்த செய்தி பரப்பினாலும் தனக்கு கவலை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் திடீர் மாற்றம்..! தமிழக அரசு அதிரடி உத்தரவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios