Asianet News TamilAsianet News Tamil

ஆளுநர் மாளிகையில் புதிய தலைமைச் செயலகமா? சட்டப்பேரவையில் எழுந்த கோரிக்கையால் அதிர்ச்சி அடைந்த பாஜக..

தமிழக அரசு- தமிழக ஆளுநர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள  நிலையில் தமிழக சட்டப்பேரவையின் புதிய கட்டிடத்தை ஆளுநர் மாளிகையில் அமைக்க வேண்டும் என மதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

MDMK MLA in the Assembly said that the General Secretariat should be set up in the Governor House premises
Author
Chennai, First Published May 7, 2022, 4:43 PM IST

ஆளுநர்- தமிழக அரசு மோதல்

 நீட் விலக்கு மசோதா காரணமாக தமிழக அரசிற்கும்- ஆளுநருக்கும் இடையே  மோதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆளுநர் விருந்து நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் ஏற்கனவே புறக்கணித்து இருந்தார். சிதம்பரத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். தொடர்ந்து ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் சம்பவம், தமிழக அரசிற்கு எந்த வித தகவலும் தெரிவிக்காமல் துணை வேந்தர்கள் கூட்டத்தை ஆளுநர் தனியாக நடத்தியது.  உள்ளிட்ட பிரச்சனைகளால் இரு தரப்பிற்கும் மோதல் போக்கு அதிகரித்துள்ளது.  இந்தநிலையில் தமிழ்நாடு ஆளுநர் இல்லம் 166 ஏக்கர் 84 செண்ட் கொண்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நடைபெறும் சட்டப்பேரவை வளாகத்தை விட பல மடங்கு அதிகம் உள்ள இடத்தில் ஒரே நபர் அல்லது அவர் சார்ந்த குடும்பத்தினர் அந்த இல்லத்தில் வசித்து வருவதாகவும். இது மக்களாட்சிக்கு எதிரானது. எனவே ஆளுநரை கிண்டியில் உள்ள ஆளுநர் இல்லத்தில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இதற்கான சிறப்பு சட்டத்தை நடப்பு கூட்டத்தொடரிலேயே அரசு இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியின் மூத்த நிர்வாகி வன்னி அரசு ஏற்கனவே கூறியிருந்தார். இது தொடர்பாகவும்  தமிழக சட்டப்பேரவையில் குரல் எழுப்பப்பட்டது.

MDMK MLA in the Assembly said that the General Secretariat should be set up in the Governor House premises

ராஜ்பவனில் சட்ட மன்ற கட்டிடம்

இந்தநிலையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் கோரிக்கை வைத்தார், அதில் தமிழக சட்டமன்றம் கூட்டம் நடைபெற்று வரும் வளாகம் இட நெருக்கடியாக உள்ளதால் சென்னை கிண்டி ராஜ்பவனில் 168 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது. எனவே தலைமைச் செயலக கட்டிடத்தை அந்த இடத்தில் புதிதாக கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே ஆளுநருக்கு கிரீன்வேஸ் சாலையில் வீடு ஒதுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள்  கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது புதிய தலைமைச்செயலகத்தை கிண்டி ராஜ்பவனில் அமைக்க வேண்டும் என கோரிக்கை பாஜகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

இதையும் படியுங்கள்

பேரிடரில் உதவிக் கரம் நீட்டியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா..!ஆர்எஸ்எஸ் குரலாக ஆளுநர்...! வைகோ கண்டனம்

 

Follow Us:
Download App:
  • android
  • ios