Asianet News TamilAsianet News Tamil

கோட்டைக்குள் தி.மு.க.வின் ஒற்றன்: ஆளுங்கட்சி போட்ட அலேக் ஐடியாவை தகர்த்து, ஸ்கோர் செய்த ஸ்டாலின்!

ஆள்வது அ.தி.மு.க.வோ அல்லது தி.மு.க.வோ யாராக இருந்தாலும் அந்தப் பஞ்சாயத்து அடிக்கடி வெடிக்கும். அதாவது மிக பிரம்மாண்டமாக நடக்கும் அரசு விழாக்களில் எதிர்கட்சி தலைவர், அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோருக்கு அழைப்பில்லை.

Master palan MK Stalin
Author
Chennai, First Published Sep 30, 2018, 12:19 PM IST

ஆள்வது அ.தி.மு.க.வோ அல்லது தி.மு.க.வோ யாராக இருந்தாலும் அந்தப் பஞ்சாயத்து அடிக்கடி வெடிக்கும். அதாவது மிக பிரம்மாண்டமாக நடக்கும் அரசு விழாக்களில் எதிர்கட்சி தலைவர், அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோருக்கு அழைப்பில்லை. அவர்களின் பெயர் போடப்படவில்லை என்பதுதான் அது. ஆனால் இன்று சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வில் அந்த எதிர்மறை சம்பிரதாயம் உடைபட்டிருந்தது. Master palan MK Stalin

அதாவது, வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் கொட்டை எழுத்துக்களில் முதலில் ஸ்டாலின் பெயரும், கீழே கனிமொழி  மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பெயரும் இடம்பெற்றிருந்தது. எடப்பாடியார் அரசின் இந்த நாகரிக அப்ரோச்சை தி.மு.க. சீனியர்கள் கூட சிலாகித்தனர். ஸ்டாலினுக்கு கொடுத்திருந்த மரியாதையை போல் கனிமொழிக்கும் அரசு கொடுத்திருந்தது கருணாநிதி குடும்பத்துக்குள் ஒரு சலசலப்பை ஏற்பத்தியது! இதை ஏஸியாநெட் ஸ்மெல் செய்து ஸ்பெஷல் கட்டுரையாக வெளியிட்டிருந்தது தனி கதை. Master palan MK Stalin

இந்நிலையில்! இதுவரையில் எல்லா மாவட்டங்களிலும் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஸ்டாலினையும், கருணாநிதி ஆண்ட போது இருந்த தமிழக நிலையையும் வைத்து கிழி கிழியென கிழிப்பதையே எடப்பாடியார் உள்ளிட்ட அமைச்சரவை செய்தது. இச்சூழலில் இன்றைய விழாவில் மேடையில் ஸ்டாலினும் அமர்கிறார் என்றால் என்ன பேசுவார்கள், அதற்கு ஸ்டாலினின் பதிலடி என்னவாக இருக்கும்? என்பதெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. ஒட்டுமொத்தாமாக எல்லோர் கண்களும் நந்தனத்தை நோக்கியே நகர்ந்திருந்தது. ஆனால் நேற்று அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டார் ஸ்டாலின். ஆம் ‘நான் இந்த விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை’ என்று அறிவித்துவிட்டார்.

 Master palan MK Stalin

தனது அறிக்கையில் “நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் என் பெயரை இடம் பெறச்செய்திருந்த பண்பாட்டை மதிக்கிறேன்.” என்று தேன் தடவியவர், அடுத்த நிமிடமே தேளாக “எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா மேடைகளை அவரது அருமை பெருமைகளை பரப்புவதற்கு பயன்படுத்தாமல் எங்கள் கட்சியையும், தலைவர் மற்றும் அவரது குடும்பத்தையும் விமர்சிப்பதற்காகவே பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில், அரசு செலவில் நடத்தப்படும் ஆடம்பர விழா இது. உச்சநீதிமன்ற உத்தரவையெல்லாம் மதிக்காமல் போக்குவரத்துக்கு இடையூறாக பல பேனர்களை வைத்து நடத்தப்படும் இந்த விழாவில் பங்கேற்பதை தவிர்ப்பதே நல்லது என முடிவெடுத்துள்ளேன்.” என்று கொட்டி தீர்த்துவிட்டார். Master palan MK Stalin

’நீங்க அழைச்சாலும் பரவாயில்லை நான் நிகழ்ச்சிக்கு வரமுடியாது’ என்று ஸ்டாலின் போட்டு உடைத்திருப்பது ஆளுங்கட்சி தரப்பை சற்று அலறத்தான் விட்டிருக்கிறது. காரணம், இந்த மேடையே எங்க குடும்பத்தை திட்டுறதுக்கு தானே, இதுக்கு நான் வந்து உட்கார்ந்து என்னத்த பண்ணிடப்போறேன்? என்று மக்கள் கவனத்தில் விழுமாறு ஸ்டாலின் கூறியிருப்பதுதான். இன்று ஸ்டாலின் விழாவுக்கு வந்தால், அவரை மேடையில் வைத்தபடி தி.மு.க.வை போட்டு வறுக்கலாம் எனும் திட்டத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் இருந்திருக்கின்றனர். அதாவது உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தி.மு.க.வை திட்ட, அவர்கள் திட்டி முடித்ததும்,  முதல்வர் உள்ளிட்டோர் எழுந்து ‘இங்கே அரசியல் காழ்ப்புணர்ச்சி கூடாது’ என்று கண்டிப்பது போல் கண்டித்து விவகாரத்தை முடிப்பது என்பது போல் பிளான்கள் இருந்ததாம். Master palan MK Stalin

மேடையில் ஸ்டாலின் பேசி முடித்ததும் இந்த கலாட்டா கச்சேரியை வைத்துக் கொள்ளலாம், இதனால் அதே மேடையில் ஸ்டாலினால் தங்கள் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாது, வம்படியாக எழுந்து வந்தெல்லாம் மைக்கை அவர் பறிக்க மாட்டார்! என்றெல்லாம் சில அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் திட்டம் வைத்திருந்தனராம். ஆனால் இதை கோட்டைக்குள் தான் வைத்திருக்கும் ஒற்றர்கள் மூலம் ஸ்மெல் செய்துவிட்டே ஸ்டாலின் விழாவை புறக்கணித்திருக்கிறார். Master palan MK Stalin

அதுவும் அட்டகாசமான ஒரு அறிக்கை மூலம் ஆளும் தரப்பின் குட்டையும் உடைத்துவிட்டார்! என்கிறார்கள். இப்போது தங்கள் பிளானை ஸ்டாலினுக்கு தூது சொல்லியது யார், எந்த அதிகாரி? என்பதுதான் எடப்பாடி தரப்பின் தேடுதலாய் இருக்கிறது. எது எப்படியோ ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் இல்லாத மேடையில் பிற மாவட்டங்களை விட வலுவாக தி.மு.க.வை போட்டுப் பொளப்பார்கள் ஆளும் தரப்பினர். ஆனால் அதை மக்கள் ரசிப்பார்களா? என்பதுதான் மேட்டரே.

Follow Us:
Download App:
  • android
  • ios