married couples participated in protest

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை காரணம் காட்டி முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்த மதுராந்தகம் அருகே திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலை

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்தர்வர்களில் 19 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி விவகாரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது

கொலைவெறி தாக்குதல் போன்று , சாதாரண போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்துள்ளது.

அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்

Scroll to load tweet…

இந்நிலையில் திமுக தலைமையில் நடைப்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் இன்று திருமணம் செய்துக்கொண்ட புதுமண தம்பதிகள் கூட கலந்துக்கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்

Scroll to load tweet…

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உட்பட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்

இதே போன்று கிண்டி சைதாப்பேட்டை பகுதிகளிலும் திமுகவினர் போராட்டம் நடத்தினர்

எழும்பூரில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்ட கனிமொழி, ஜவாஹிருல்லா, திருமாவளவன் உட்பட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.