ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து பெண்ணின் தந்தை ரத்தினசாமி புகார் தெரிவித்துள்ளார். புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரன் இவருக்கு  வயது 43. இவருக்கு சந்தியா என்ற 23 வயது பெண்ணை பார்த்து திருமணம் பேசி முடிக்கப்பட்டது.

சந்தியா எம்.சி.ஏ. படித்துள்ளார்.  வருகிற 12-ந் தேதி சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலிலேயே திருமணத்தை நடத்திடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டு, அதற்காக இரு வீட்டாரும் பத்திரிகைகளை ஊர்முழுக்க கொடுத்து வந்தனர்.

செப்டம்பர் 12-ம் தேதி பண்ணாரி அம்மன் கோயிலில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்காக பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டது. குடும்பத்தினர் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்குக் கொடுத்து வந்தனர். இரண்டு வீடுகளிலும் கல்யாண களை கட்டியது. திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில், திடீரென சந்தியா கடந்த 1-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். 

கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் தேடியும் சந்தியா கிடைக்கவில்லை. இதனையடுத்து சந்தியாவின் தாயார், கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சந்தியாவுக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், அவருடன் சந்தியா சென்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

பல ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்ய முடிவு எடுத்த எம்எல்ஏ ஈஸ்வரன் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானதால் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். இந்த திருமண நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பதாக இருந்தது. இந்த நிலையில் இந்த மனப் பெண் ஓடிப்போனதால் சோகத்தில் இருந்த MLA ஈஸ்வரன்  உறவினர்கள் ஏற்கனவே குறித்த தேதியில் திருமணத்தை நடத்த எம்எல்ஏ தரப்பில் ஏற்பாடுகள் நேற்றே ஆரம்பிக்கப்பட்டது.

எம்எல்ஏவிற்கு அவரது சமூகத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை பார்க்க தொடங்கினர். அதன்படி சத்தியமங்கலத்திலேயே பெண்ணையும் பார்த்து திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளனர். அதனால் ஏற்கனவே குறித்த முகூர்த்தத்தில் என் திருமணம் நடக்கும் என்று எம். எல்.ஏ. உறுதி கூறியுள்ளார்.