உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும்

சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.

அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.

#    ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக சசிகலா இருந்தாரா? இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
-    (ஜெ., உதவியாளர் கார்த்திகேயனிடம்) நீதிபதி ஆறுமுகசாமி)

#    தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
-    ஓ.பன்னீர்செல்வம்

#    தமிழக மாணவர்கள் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து தேர்வுகளையும் சமாளிப்பார்கள்.
-    செங்கோட்டையன்

#     பாடலில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக டைரக்டர் சொன்னபடி கண்ணடித்தும், புருவத்தை உயர்த்தியும் நடித்தேன். என் மீது பலர் காதலில் விழுந்திருப்பதாக சொல்கிறார்கள். இது எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
-    பிரியா வாரியர்

#    தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று சில சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. அவற்றையெல்லாம் முறியடித்து நிச்சயம் இந்த கழகம் வெற்றி பெறும்.
-    கனிமொழி

#    ரஜினிகாந்த் என்னுடைய நல்ல நண்பர். அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என்று நினைக்கிறேன். சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டுமென்றால் கர்நாடகாவுக்கு போய் சரிசெய்யட்டும்.
-    ராதாரவி

#    திரைப்படங்களில் நான் நடிக்கப்போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. முழு நேர அரசியலுக்கு வந்த பிறகே நடிப்பை தொடர்வது குறித்து முடிவெடுப்பேன்
-    கமல்ஹாசன்

#    ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறந்தது என்பது, ஆட்டோ சங்கர், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோரின் படங்களை திறப்பதற்கு சமம்.
-    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

#    மதச்சார்பற்ற அரசு என்று தன்னை சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு, இந்து சமய கோயில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஏன்?
-    ஹெச்.ராஜா

#    முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இவர்களின் ஓராண்டு கால ஆட்சி பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.
-    பிரேமலதா