Asianet News TamilAsianet News Tamil

ரஜினிகாந்த் ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. பாசிச பா.ஜ.க.வின் கோர முகம்.. சூப்பர்ஸ்டாரை சுத்திவிட்டு அடிச்சது யார் தெரியுமா?

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமல் மட்டுமா அரசியலை கலக்கினார்?...நம்ம மன்சூரலிகானும்தான் திண்டுக்கல் தொகுதியே திணறத் திணற பிரசாரம் செய்தார். நாம் தமிழர் கட்சியின் மற்ற எல்லா தொகுதிகளிலுமே சீமானின் பிரசாரம்தான் அவர்களின் அடையாளமாக இருந்தது. ஆனால் இந்த ஒரு தொகுதியில்தான் மன்சூரின் பிரசாரம்தான் சீமானின் அடையாளமாகி போனது. 

Mansoor Ali Khan attack specch rajini
Author
Tamil Nadu, First Published Apr 26, 2019, 5:39 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமல் மட்டுமா அரசியலை கலக்கினார்?...நம்ம மன்சூரலிகானும்தான் திண்டுக்கல் தொகுதியே திணறத் திணற பிரசாரம் செய்தார். நாம் தமிழர் கட்சியின் மற்ற எல்லா தொகுதிகளிலுமே சீமானின் பிரசாரம்தான் அவர்களின் அடையாளமாக இருந்தது. ஆனால் இந்த ஒரு தொகுதியில்தான் மன்சூரின் பிரசாரம்தான் சீமானின் அடையாளமாகி போனது. 

வயலில் களையெடுத்தார், மீன் நறுக்கினார், பெட்டிக்கடையில் பீடி விற்றார், பூக்கடையில் முழம் போட்டார்...இன்னும் என்னென்னவோ செய்தார். பிரசாரத்துக்கு வரும் அரசியல்வாதிகள் பொதுவாக எப்பவோ ஒரு நாள் இப்படியான சீன்களை அரங்கேற்றுவார்கள். ஆனால் மன்சூரோ, தினம் தினமும் புதுசு புதுசாய் தெறிக்க விட்டார். தேர்தல் முடிந்து, சற்றே ஓய்வில் இருப்பார் மன்சூரலிகான்...என்று நினைத்தால், மனிதர் ரஜினியை தூக்கிப் போட்டு பந்தாடிக் கொண்டிருக்கிறார். எங்கெ தர்பார் ஷுட்டிங்கிலா? என்று கேட்டால்....இல்லை, யதார்த்த அரசியல் வெளியில்தான். தலையை உருட்டி உருட்டி, பரட்டை முடியை கோதித் தேய்த்தபடி ரஜினி, கமல், ஊடகங்கள், மக்கள் என்று அத்தனை பேர் பற்றியும் மன்சூர் தட்டியிருக்கும் பகீர் ஸ்டேட்மெண்டுகளின் ஹைலட் தொகுப்பு இதோ...

* ஊழல் பண்ணினனவனையும், கேடு  செஞ்சவனையும், லாரியில பொம்பளைங்களைக் கூட்டிட்டு வந்து கூட்டம் காண்பிக்கிறவனையும் முக்கியமா காட்டி பேசுதுங்க ஊடகங்கள். உங்களுக்கெல்லாம் எங்களை மாதிரி உண்மையிலேயே மக்கள் சேவைக்கு வர்றனைப் பார்த்தா கிண்டலா தெரியுது, இல்லையா!

* வத்தலகுண்டு சந்தைக்கு போயி விவசாயிங்கட்ட பேசிப்பார்த்தேன்...நூறு முருங்கைக்காயை வெறுமனே எண்பது ரூபாய்க்கும், முப்பத்து அஞ்சு கிலோ கத்திரிக்காயை வெறும் தொண்ணூறு ரூபாய்க்கும் விற்கிறார். விளைய வைக்கிறவனால விலையை நிர்ணயம் பண்ண முடியலை. இப்படியொரு அரசாங்கத்தை நடத்துறவங்க தூக்குப் போட்டு சாகலாம். 

* நான் திண்டுக்கல் பிரசாரத்துல வித்தியாசங்களைக் காட்டி பிரசாரம் பண்ணினது மக்களை ஈர்க்கத்தான். ஒருவேளை ஜெயிக்க வெச்சால் பிரசாரத்துல செஞ்ச சேவையை அஞ்சு வருஷம் நிஜமாவே செய்வேன். ஆனா இந்த மக்கள் என்ன செஞ்சு வெச்சிருக்காங்களோ வாக்களிப்பு தேதியில. எவனுக்கு தெரியும். 

* என்னை மட்டுமல்ல பல பேரை சினிமாவில் உருவாக்கியது விஜயகாந்த் எனும் மாமனிதர். ஆனால் அவர் கட்சி துவங்கும்போது என்னைக் கூப்பிடலை. அவர் கூட இருக்கும் சிலர் என்னை, விஜயகாந்தை நெருங்கவிடாமல் செஞ்சுட்டாங்க. அதனால சர்தான் போங்க! நீங்களும்...ன்னு விட்டுட்டேன். 

* தேர்தல் ஆணையம் எப்படி செயல்பட்டுச்சுன்னு கேட்கிறாங்க. ஆளுங்கட்சியிடம் அந்த ஆணையம் சோரம் போயிடுச்சு! அவ்வளவுதான். செருப்பாலயும், விளக்குமாத்தாலயும் அடிச்சாலும் கூட அந்த ஆணையத்துக்கு புத்தி வராது. 

* ரஜினிகாந்த் இருக்காரே அவரு பாசிச  பா.ஜ.க.வின் கோர முகம். சினிமாவுலதான் பாட்டாளிகளின் கூட்டாளியா நடிப்பார். ஆனா நிஜத்தில் அவர் கார்ப்பரேட்களின் கைக்கூலி, அவங்களுக்கு சொம்பு தூக்கும் காஸ்ட்லி நபர். நாட்டு நடப்பே தெரியாம பேசுவாரு, கர்நாடககாரன் குடிக்க ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தரமாட்டேங்கிறான், அவன் எப்படி நதிகளை இணைக்க அனுமதிப்பான். ஆனா இவரு அதை வெச்சு பி.ஜே.பி.க்கு மறைமுகமா ஓட்டுக் கேட்டாரு பாருங்க! ச்சை....

* இம்புட்டு பிரசாரம் பண்ணிய பிறகும் கூட மோடியே மறுபடியும் பிரதமராயிட்டா என்ன பண்ணலாமுன்னு கேட்கிறாங்க....பேசாம நாமெல்லாம் தூக்குபோட்டு சாகலாம். என்று வெளுத்திருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios