தான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது ஜெயலலிதா தன்னை அழைத்து 45 நிமிடம் தனிமையில் பேசியதாக மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.

ஜெய டிவியில் இயக்குனர்களாக இருந்த தன்னிடமும் துக்ளக் சோ ராமசாமியிடமும் ஜெ. அடிக்கடி புலம்பியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது சசிகலா கும்பலால் தனது உயிருக்கு என்றைக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை ஜெ. பலமுறை தன்னிடமும் சோவிடமும் தெரிவித்திருப்பதாக பகீர் தகவலை தெரிவித்தார்.

மேலும் சசிகலா உள்ளிட்டோரை நீக்குவதற்கு முன்பு கூட ஜெயலலிதா தன்னிடம் ஆலோசனை நடத்தியதாக மனோஜ் தெரிவித்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய சபையான நாடாளுமன்றத்தில் அமரவைத்து அழகு பார்த்த புட்ச்சி தலைவிக்கு நான் செய்யும் நன்றி காணிக்கை இது. அதனால் அவரது எண்ணங்களுக்கு எதிராக நான் எதையும் யாரையும் செய்ய விடமாட்டேன்.

எனவே ஜெயலலிதாவுக்கு பிடிக்காத நபர்கள் பதவிக்கு வருவதையும் சசிகலா பொது செயலாளர் ஆனதையும் தாம் கடுமையாக எதிர்ப்பதாக மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.

ஒரு தற்காலிக பொது செயலாளராக இருக்கும் சசிகலாவுக்கு நானும் என் தந்தையும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று தெரிவித்தார்

ஏற்கெனவே சசிகலா புஷ்பா, கேபி முனுசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பி.எச்.பாண்டியன் மனோஜ் பாண்டியனின் இந்த பேச்சு அதிமுக வட்டரத்தில் பற்றி எரிய தொடங்கியுள்ளது.