Asianet News TamilAsianet News Tamil

மனோகர் பாரிக்கருக்கு கணையப் புற்று நோய்…. கன்பார்ம் பண்ணிய கோவா அமைச்சர்….; குடும்பத்தினருடன் இருக்க பாரிக்கர் முடிவு….

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அம்மாநில சுகாதாரத்துறை  அமைச்சர் விஸ்வஜித் ரானே மவுனம் கலைத்தார். அவர் தன் குடும்பத்துடன் அமைதியாக வாழட்டும் என்றும், கோவா மக்களுக்காக சேவை செய்த அவர் நிம்மதியாக இருக்கத் தகுதி படைத்தவர்தான் என்றும் ரானே உருக்கத்துடன் தெரிவித்தார்..

Manohar parrikkar affect by cancer
Author
Goa, First Published Oct 28, 2018, 9:19 AM IST

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் கோவா முதலமைச்சருமான மனோகர் பாரிக்கருக்கு என்ன நோய் என்பதை மாதக்கணக்கில் ரகசியமாக வைத்திருந்தனர். காங்கிரஸ் கட்சி அக்டோபர் 26ம் தேதி முதல்வர் மனோகர் பாரிக்கர் மாநிலத்தை ஆளும் உடல்தகுதியுடன் இருக்கிறாரா என்பதை 4 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்று ஆளும் பாஜக தலைமை கூட்டணிக்கு காலக்கெடு நிர்ணயித்தது.

Manohar parrikkar affect by cancer

இந்நிலையில் இதற்கு மேலும் மறைக்க முடியாது என்ற நிலை ஏற்பட கோவா சுகாதார அமைச்சர் விஷ்வஜித் ரானே, “அவர் கோவா மாநில முதல்மைச்சருக்கு கணையத்தில் புற்று நோய் ஏற்பட்டுள்ளதாக நேற்று வெளிப்படையாக அறிவித்தார்.

மனோகர் பாரிக்கர்  தன் குடும்பத்துடன் அமைதியாக வாழட்டும் என்றும் கோவா மக்களுக்காக சேவை செய்த அவர் நிம்மதியாக இருக்கத் தகுதி படைத்தவர்தான் என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

அவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட விரும்பினால் அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அவர் குடும்பம்தான் அதை தெரிவிக்க வேண்டும் என்றும் ரானே கூறினார்.

Manohar parrikkar affect by cancer

மனோகர் பாரிக்கர் இந்தியாவிலும் அயல்நாட்டிலும் பல்வேறு மருத்துவமனைகளிலும் கடந்த 7 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் இல்லாததால் கோவா ஆட்சியதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட்டது.

கடந்த அக்டோபார் 14ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து பாரிக்கர் வெளியே வந்தது முதல் பொதுவெளியில் முகத்தைக் காட்டவில்லை. தற்போது விட்டில் படுக்கையில்தான் இருக்கிறார். மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் 24 மணி நேரமும் அவரது அறையில் கடைமையாற்றி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios