Manmohan singh speake about gst

தவறாக வடிவமைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) நாட்டில் வேலைவாய்ப்புகளையும், வர்த்தகத்தையும் அழித்துவிட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. வரியால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்கும் கூட்டம் நேற்று நடந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள், கட்சியின் பொதுச்செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசையும், அது அறிமுகம் செய்த ஜி.எஸ்.டி. வரியையும் கடுமையாக சாடியுள்ளார். அது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறுகையில், “ முன்னாள் பிரதமர் மன்மோகன் கூட்டத்தில் பேசுகையில், “ மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான அரசால் தவறான வடிவமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. நாட்டில் வேலைவாய்ப்புகளையும், வர்த்தகத்தையும் அழித்துவிட்டது .இதந் மூலம் மிகவும் கவலை கொள்வதாக அவர் தெரிவித்தார். 

ரூபாய் நோட்டு தடை என்பது திட்டமிட்ட, அமைப்பு சார்ந்து மக்களிடம் திருடப்பட்டுள்ளது, சட்டப்பூர்வமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை ஜி.எஸ்.டி. வரி அழித்துவிட்டது, வர்த்தகத்தை முடக்கிவிட்டது என்று பேசினார்’’ எனத் தெரிவித்தார்.