கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது. இந்த சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் மார்ச் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மணிப்பூர் மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் வரும் பிப்ரவரி 28ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் 5ஆம் தேதியும் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வரும் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
தற்போது பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மணிப்பூர் மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது என்பது தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக - 27 முதல் 31 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 11 முதல் 17 இடங்கள்
தேசிய மக்கள் கட்சி - 6 முதல் 10 இடங்கள்
நாகா மக்கள் முன்னணி - 2 முதல் 6 இடங்கள்
மற்றவர்கள் - 3 முதல் 7 இடங்கள்
இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக - 33 முதல் 43 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 4 முதல் 8 இடங்கள்
தேசிய மக்கள் கட்சி - 4 முதல் 8 இடங்கள்
மற்றவர்கள் - 6 முதல் 15 இடங்கள்
என்.டி.டி.வி கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக - 30 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 14 இடங்கள்
சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் :
பாஜக - 23 முதல் 27 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 12 முதல் 16 இடங்கள்
தேசிய மக்கள் கட்சி - 10 முதல் 14 இடங்கள்
மற்றவர்கள் - 3 முதல் 7 இடங்கள்
