முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை எம்.பி.பதவிக்காலம் கடந்த ஜுன் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்தது நடப்பு கூட்டத் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.  இது குறித்து கருத்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மன்மோகன் சிங் போன்ற மேதைகளை இந்த மாநிலங்களவை மிஸ் பண்ணுவதாக கூறினார்.

அதே நேரத்தில் மன்மோகன் சிங்கிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் திமுகவிடம் பேசி வந்தனர். ஆனால் மன்மோகன் சிங்கிற்கு, எம்.பி.சீட் இல்லை என, தி.மு.க., கைவிரித்தது.

தமிழகத்தில், திமுகவுக்கு, கிடைக்கும் மூன்று எம்.பி., பதவிகளில் ஒன்றை, ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கி விட்டு, மற்ற இரண்டு இடங்களுக்கும், தன் கட்சியினரை வேட்பாளர்களாக, ஸ்டாலின் நேற்று முனதினம் அறிவித்தார்.

இந்நிலையில் ராஜஸ்தானிலிருந்து  மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு  மன்மோகன்சிங் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் . ஆட்சி நடக்கிறது. இங்கு பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளதால் மன்மோகன் போட்டியின்றி தேர்வாகலாம் என கூறப்படுகிறது.