Asianet News TamilAsianet News Tamil

மதுக்கடை பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை.. சென்னை கொளத்தூரில் கொடூரம்..

பின்னர் இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்தவரின் சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்து  தொடர்பு கொண்டு பேசியதில் இறந்தவரின் மாமனார் பேசினார்.  

Man beaten to death in liquor bar dispute .. Atrocity in Kolathur, Chennai ..
Author
Chennai, First Published Apr 12, 2021, 2:44 PM IST

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் அருகே மதுக்கடை பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை புழல் காவல் நிலைய பகுதியான லஷ்மிபுரம் பாரதி சாலையோர பிளாட்பாரத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது.இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார்  பலத்த காயத்துடன் இருந்த இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Man beaten to death in liquor bar dispute .. Atrocity in Kolathur, Chennai ..

பின்னர் இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்தவரின் சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்து  தொடர்பு கொண்டு பேசியதில் இறந்தவரின் மாமனார் பேசினார்.  மருமகன் இறந்தது குறித்து அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் கொடுத்த தகவலில், உயிரிழந்தவர் லட்சுமிபுரம் வெங்கடேஸ்வரா நகர் 3வது தெருவை சேர்ந்த அன்பழகன் ( 52) என்பதும், தனியார் கம்பெனியில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்தார் என்பது தெரியவந்தது.

Man beaten to death in liquor bar dispute .. Atrocity in Kolathur, Chennai ..

பின்னர் அருகிலுள்ள செல்போன் கடையின் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்ததில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்,  அதில் ஒருவர் கை மற்றும் காலால் எட்டி உதைத்தும் பலவந்தமாக தாக்கியதால் தலை, நெற்றி பகுதி, முகம் மூக்கு வாய்ப்பகுதியில் பலத்த காயத்துடன் ரத்தம் வடிந்த நிலையில் வெங்கடேசட் மயக்கமடைந்து கீழே சரிந்தது தெரியவந்துள்ளது.  பின்னர் வெங்கடேசை கொலை செய்த இருவரும் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சியும் அதில் பதிவாகி உள்ளது. அந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios