மேற்கு வங்காளத்தில் பாஜக வளர்ச்சி கண்டுள்ள நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி, கட்சிகளுக்கு தேர்தல் பணியாற்றும் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ளார். 
மேற்கு வங்காள மாநிலத்தில் வரும் 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பதிவிக்காலம் முழுமையாக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே பணியைத் தொடங்கியிருக்கிறார் மம்தா பானர்ஜி. குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் குறிப்பிடும்படியான வளர்ச்சியைக் கண்டிருப்பதால், தேர்தல் பணியை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறார்.
இதன் ஒரு பகுதியாக கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்துகொடுத்து பணியாற்றும் பிரசாந்த் கிஷோரை மம்தா பானர்ஜியை இன்று சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம்வரை நீண்டது. இட்ந்தச் சந்திப்புக்கு பிறகு 2021 தேர்தலில் மம்தா பானர்ஜியுடன் இணைந்து செயல்பட பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  அடுத்த மாதம் முதல் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்காக தேர்தல் பணிகளை கிஷோர் செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தத் தொகுதிகள் 120 சட்டப்பேரவைத் தொகுதியில் வென்றதற்கு சமம். மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 148 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். பாஜக மிக நெருக்கமாக வெற்றி பெற்றிருப்பதால், மம்தா அப்செட் ஆகியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி மேலும் முன்னேறி வருவதைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.


அதன் அடிப்படையில்தான் பிரசாந்த் கிஷோருடன் மம்தா கைகோர்த்துள்ளார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்  தேர்தலில் பாஜகவுக்காக தேர்தல் வியூகங்கள் வகுத்துகொடுத்து பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர் என்பது குறுஈப்பிடத்தக்கது.