Asianet News TamilAsianet News Tamil

மம்தாவை வெறுப்பேற்ற ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்... பாஜக மீது செம காண்டான மம்தா!

மேற்கு வங்க மாநில பாஜக தலைமை, மம்தா பானர்ஜிக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதி 10 லட்சம் தபால்களை அனுப்பப் போவதாக அறிவித்தது. செல்லும் இடங்களில் எல்லாம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்புவோர் வங்காளிகள் இல்லை என மம்தா பானர்ஜி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார். 

Mamtha bannerji slams  Bjp
Author
West Bengal, First Published Jun 3, 2019, 8:44 AM IST

மேற்கு வங்காளர் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தை பாஜகவினர் கையில் எடுத்துள்ள நிலையில், “ஜெய் ஸ்ரீராம் கோஷம் மூலம் மதத்தை அரசியலுடன் பாஜக சேர்க்கிறது” என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.Mamtha bannerji slams  Bjp
தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் மம்தாவுக்கு எதிராக பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தை எழுப்பினார்கள். இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற மம்தாவுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’  கோஷத்தை எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த மம்தா காரை விட்டு இறங்கி கோஷமிட்டவர்களை கண்டித்தார். இந்த விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.Mamtha bannerji slams  Bjp
மேலும் மேற்கு வங்க மாநில பாஜக தலைமை, மம்தா பானர்ஜிக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதி 10 லட்சம் தபால்களை அனுப்பப் போவதாக அறிவித்தது. செல்லும் இடங்களில் எல்லாம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்புவோர் வங்காளிகள் இல்லை என மம்தா பானர்ஜி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் மம்தாவை தொடர்ந்து எரிச்சல்படுத்தும் வகையில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்புவது குறித்து தனது ஃபேஸ்புக் பதிவில் மம்தா காட்டமாகப் பதிவு செய்துள்ளார்.

Mamtha bannerji slams  Bjp
 “‘ஜெய் சாய் ராம்’, ‘ஜெய் ஸ்ரீராம்’ போன்றவை மதத்துடன் தொடர்புடையவை. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற மத கோஷத்தை பாஜக தவறான நோக்கத்துடன் தனது கட்சி கோஷமாகப் பயன்படுத்தி வருகிறது. மதத்தை அரசியலுடன் பாஜக கலக்கிறது. இந்த கோஷங்களை எனது கட்சி பேரணியிலோ, நிகழ்ச்சிகளிலோ எழுப்புவதால் எந்தப் பிரச்னையும் கிடையாது. பிறர் மீது திணிக்கும் வகையிலான அரசியல் கோஷங்களுக்கு நாங்கள் மதிப்பளிப்பது இல்லை. வன்முறை மூலம் வெறுப்பு அரசியலை வேண்டுமென்றே பரப்பும் முயற்சியை ஒன்றிணைந்து எதிர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios