மேற்கு வங்கத்தில் தம்லுக் பகுதியில்  தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி  ,சகோதரி மம்தா மிகவும் விரக்தியடைந்துள்ளார். கடவுள் பற்றி பேச அல்லது கேட்க கூட விரும்பவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கமிடும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார் சகோதரி மம்தா. ஃபானி புயலை வைத்து கூட மம்தா பானர்ஜி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார். நான் சகோதரி மம்தாவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர் அகங்காரத்துடன்  என்னிடம் பேச மறுப்பு தெரிவித்தார் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி இருந்தார். 

மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள மம்தா பானர்ஜி. ஃபானி புயல் குறித்து பிரதமர் எனக்கு பேசியபோது நான் காரக்பூரில் ஒரு  பிரசாரத்தில் இருந்தேன். அதனால் தான் நான் போனை எடுக்க முடியவில்லை என விளக்கினார். 

அதே நேரத்தில் தேர்தல் முடிந்தவுடன் காலாவதியாகும் பிரதமருடன் நான் பேச விரும்பவில்லை எனவும் பிரதமருடன் பேச்க் கொள்கிறேன் எனவும் மம்தா தெரிவித்தார்.