திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மேற்கு வங்க மாநிலத்தை பங்களா என பெயர் மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பிரதமர் மோடியை சந்தித்தபோதும், இதே கோரிக்கையை மம்தா முன்வைத்தார்.

அரசியலில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இரண்டு கட்சி தலைவர்களும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வந்தனர்.
சட்டவிரோத குடியேறிகள் அனைவரையும் வெளியேற்றுவதற்கு, அசாமில் உள்ளது போன்று நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க வேண்டியது அவசியம் என்று அமித் ஷா கூறியிருந்தார். அதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என பாஜக மற்றும் மோடி அரசுக்கு மம்தா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தார். காஷ்மீர் பிரச்னையிலும் எதிர்ப்பு காட்டினார் மம்தா. 

அந்த சந்திப்பில் மேற்குவங்க மாநிலத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதி குறித்து பேசியதாகவும்,  பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் பேசினேன்’’ எனத் தெரிவித்துள்ளார் மம்தா. 

ஆனால், மோடி அமித் ஷாவை பகைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. இன்னும் அவர்களது ஆட்சி 5 ஆண்டுகள் தொடரும். அவர்களை பகைத்துக் கொண்டால் இழப்பு நமக்கே. மாநிலத்திற்கு வரவேண்டிய நிதியும் முடங்கி விடும். ஆகையால் பாஜகவை அனுசரித்து செல்வதே நல்லது. இன்னொரு பக்கம்  சாரதா சிட் ஃபன்ட் மோசடி வழக்கு விசாரணை தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.

 

இந்த வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் மீது சி.பி.ஐ, பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவர் கைதானால், மேற்கு வங்கத்தின் முக்கியப் புள்ளிகள் இந்த வழக்கில் சிக்கும் சூழல் ஏற்படும். இதைத் தடுக்கவே, பாஜகவுடன் திடீர் நட்பு பாராட்டக் கொளம்பி விட்டார் மம்தா பானர்ஜி. அத்தோடு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலையையும் மம்தா நன்றாகவே உணர்ந்துள்ளார். இதையெல்லாம் கணக்குப்போட்டு தான் தற்போது பாஜகவுடன் சமரசமாக செல்லும் நோக்கில் மோடியையும், அமித் ஷாவையும் அவர் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இனி பாஜக விவகாரங்களில் இந்த வங்கப்பெண்புலி வாலை சுருட்டியே வைத்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.