நிழல் அரசாங்கமாக உள்ள நாம் வெகு விரைவில் ஆட்சிக்கு வருவோம். விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும். சுற்றுச்சூழல் பற்றி பேசும் ஒரே கட்சி நாம் மட்டும் தான் மக்கள் நீதி மய்யம் வளர்ச்சி பிடிக்காதவர்களுக்கு கூட வியப்பாக இருக்கிறது என வேலூர் பிரச்சாரத்தில் கமர்ஹாசன் பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற தலைப்பில் தனது 4-கட்ட பிரச்சாரத்தை மேற்க்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று (06.01.2021) வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், காட்பாடி, அணைகட்டு போன்ற பகுதிகளில் வேன்மூலம் பிரச்சாரம் மேற்க்கொண்டார். காட்பாடியில் கொட்டும் மழையிலும் நனைந்தபடி  இருந்த மக்கள் மத்தியில் கமலஹாசன் பிரச்சாரம் மேற்க்கொண்டார். பின்னர் வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி முகர்களை சந்தித்து  உரையாற்றிய அவர் பேசியதாவது: 

வேலூர் சிப்பாய் கலகம் பற்றி விவேகானந்தர் எனது பயணம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் எங்கள் சிப்பாய் கலகங்கள் எல்லாம் பெரும் எழுச்சியோடு ஆரம்பித்தாலும் தோற்றதர்க்கு காரணம் தளபதிகள்  தலையை கொடுக்க முன்வரவில்லை. சிப்பாய் கழகம் தோற்க்க காரணம் தலைவர்கள் தலை கொடுக்காததே. தலைவர்கள் தலை கொடுத்தால் தான் வெற்றி வரும். நான் என் தலையை தமிழகத்திற்கு வைத்துவிட்டேன். நீங்களும் வைத்தால் தான் தமிழகத்தை மீட்க முடியும். நீங்கள் எல்லோருமே தலைவர்கள் தான். மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சியை பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் கூட இப்போது வியந்துபோய் இருக்கிறார்கள். எந்த கட்சியிலும் பெண்கள் போஸ்டர் ஒட்டியது கிடையாது. ஆனால் மக்கள் நீதி மய்யத்தில் மகளீர் அணியினர் போஸ்டர் ஒட்டுகின்றனர். 

அது மற்ற எந்த கட்சியிலும் கிடையாது. எதுவும் நமக்கு சாதகமாக நடக்கவில்லை நாம் நடத்தினோம். வெற்றியை நோக்கி அற்புதமாக நடைபோட்டுக்கொண்டுள்ளோம். அனைத்தும் பிரமாதமாக போய்க்கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் வெளியே போக வேண்டாம் என சொன்னார்கள். நான் கூட்டத்திற்குள் போகவில்லை குடும்பத்திற்குள் போகிறேன் எதுவும் நேரது பாதுகாப்பாக இருப்பேன் என கூறி வந்துள்ளேன். 

இல்லத்தரசிகளுக்கான ஊதிய என்பதை இன்று ஏளனம் செய்யப்படலாம் நாளை தமிழகம், உலகம் நம்மை பாராட்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணிணி அரசு செலவில் நிர்ணயிக்கப்படும். அது இலவசம் அல்ல அரசு மனித வளத்தில் செய்யும் முதலீடு. திறன்மேம்பாட்டு மையத்தை பரமகுடியில் தொடங்கிவிட்டோம். கரம் வலுப்பட்டால் மற்ற இடத்திலும் அமைப்போம். விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சமஉரிமை வழங்கப்படும்.

சுற்றுசூழலை பற்றி பேசும் ஒரே கட்சி நாம்தான். பேசுவது மட்டும் அல்ல அதர்கான திட்டத்தையும் வகுத்து வைத்துள்ளோம். நாம் நிழல் அரசாங்கம், வெகு விரைவில் ஆட்சிக்கு வருவோம் அப்படி வந்தால் நாம் போட்டு வைத்துள்ள திட்டத்தையெல்லாம் செயல்படுத்துவோம் என கமலஹாசன் பேசினார்.