People should have a coalition of Public Welfar

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியை மக்கள் பொருட்படுத்தவே இல்லை.
சென்னை ராயப்பேட்டையில் சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எங்களது கூட்டணி கட்சியான திமுக போட்டியிடுகிறது. இதனை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களுக்கு அதிமுகவையோ, தினகரனையோ ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை.
மக்கள் நலக் கூட்டணியை மக்கள், பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. அதனை பொருட்படுத்தவே இல்லை. தமாகா உட்பட எந்த கட்சியும் திமுகவுக்கு ஆதரவு அளித்தாலும் அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம்.
மேலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்திடமோ, ஓ.பன்னீர்செல்வத்திடமோ இல்லை. இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred