Heroic sword gift to Kamal Hassan
மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல் ஹாசனுக்கு, விவசாய சங்க பிரதிநிதிகள், வீரவாள் மற்றும் ஏர்கலப்பை ஆகியவற்றை பரிசாக அளித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் இல்லத்துக்கு வந்த விவசாய சங்க பிரதிநிதிகள் இதனை அளித்தனர்.
இதன் பின்னர் கமல் ஹாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள காலா திரைப்படத்தைப்
பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றார்.
நான் ஆயிரத்தில் ஒருவன் அல்ல என்றும் கோடியில் ஒருவன் என்றும் கூறினார். விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை என்று கர்நாடகாவில் கூறியுள்ளனர்.
திரைப்படம் தடை தொடர்பாக வியபாரிகள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இரு மாநில விவசாயிகளும் கலந்து பேசினால் அரசியல் ஆப்புக்கு இடமிருக்காது என்றும் விவசாயிகளுக்கு நன்றி கடன் செலுத்தவே தான் கர்நாடக
சென்றதாகவும் அப்போது கமல் கூறினார்.
