எத்தனைமுறை சென்றிருப்பேன்?  போயஸ் தோட்ட இல்லம் இருக்கும் திசை நோக்கி கும்பிட்டவாறே சென்ற போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என மைத்ரேயன் MP தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வேதா இல்லம், நம்பர் 81, போயஸ் தோட்டம், தேனாம்பேட்டை, சென்னை வெறும் விலாசம் அல்ல; ஜெயலலிதா  என்ற இரும்பு மனுஷியின் கோட்டை,  இந்திய தலைவர்களை ஓடோடி வரவழைத்த தமிழகத்தின் அதிகார மையமாக திகழ்ந்தது. ஜெயலலிதாவின் இளமைக்காலம் துவங்கி இறப்பின் இறுதி நிமிடங்கள் வரை அந்த வீட்டில் மிதந்துகிடக்கிற உணர்வுகளுக்கு வயது கிட்டதட்ட அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன அதிமுகவின் விசிட்டிங் கார்டு தான்  இந்த போயஸ் கார்டன் வீடு. 

ஜெயலலிதா மறைவிற்குப் பின் இந்த வீடு பல்வேறு இன்னல்களை சந்தித்தது, எப்போதுமே ஜெ ஜெ என ஜெயலலிதாவிற்காக கூடிய கூட்டம், இப்போது ஒரு காக்கா குருவிகள் இல்லாத நிலையில் இருக்கிறது. 

மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;  நேற்று மாலை அண்ணா சாலை ஹயாட் ரீஜென்சி ஓட்டலுக்கு எனது நண்பரைக் காணச் சென்ற போது டிடிகே சாலையில் இருந்து போயஸ் கார்டன் வழியாக சென்றேன். 

கடந்த 19 ஆண்டுகளில் இதே வழியாக எத்தனை முறை சென்றிருப்பேன்? அம்மா அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன் என்பதால் அம்மா அவர்கள் வாழ்ந்த வேதா நிலையத்திற்கு நேரம் காலம் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் செல்லும் வாய்ப்பு. 

அந்த அளவுக்கு அந்த வீடு நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இருந்தது. ஆனால் 2017 ஜனவரிக்குப் பிறகு நமது அம்மாவின் போயஸ் கார்டன் வீடே நமக்கு அந்நியமாகி விட்டது. நேற்று மாலை அந்த வழியாக செல்லும் போது நாம் கோயிலாக வணங்கும் அம்மா அவர்களின் போயஸ் தோட்ட இல்லம் இருக்கும் திசை நோக்கி கும்பிட்டவாறே சென்ற போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.