மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் ., தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனாஆட்சி அமையுள்ளது. இது தொடர்பாக சிவசேனா கூட்டணிக்கு, ஆதரவு அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மஹாராஷ்டிராவில் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த கூட்டணிக்கு ''மஹா விகாஸ் அகாதி'' என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிவசேனாவும், காங்கிரசும் முதன்முறையாக ஆட்சி அமைக்க உள்ளதால், குறைந்த பட்ச செயல் திட்டம் தொடர்பாக காங்கிரஸ்., தேசியவாத காங்கிரஸ்., தலைவர்களுடன் சிவசேனா ஆலோசனை கூட்டம் நடந்தது. 

இக்கூட்டம் நிறைவடைந்த நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதலமைச்சராக  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேசியவாத காங்கிரஸ். தலைவர் சரத்பவார் இன்று அறிவித்தார்.

இந்நிலையில் நாளை) மூன்று கட்சிகளும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர். தொடர்ந்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மகாராஷ்டிரா வில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.