Asianet News TamilAsianet News Tamil

மத்திய பிரதேச வைரஸ் மகாராஷ்டிரத்தில் நுழையாது..!! பாஜகவை கொரோனாவுடன் ஒப்பிட்ட சிவசேனா..??

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவார் ,  மத்திய பிரதேசம் போன்ற சூழ்நிலை மகாராஷ்டிராவில் இல்லை,   மகா விகாஸ் அகாடி கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது .

Maharashtra sivasena leader sanjay rawath criticized mathya pradesh political and criticized bjp
Author
Chennai, First Published Mar 12, 2020, 1:41 PM IST

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும்,  மத்திய பிரதேசத்தில் நுழைந்ததுபோல வைரஸ் கிருமி மராட்டியத்தில்    நுழையாது என சஞ்சய் ராவத் கூறினார் .  மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த நிலையில் ,  திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது அந்த கட்சியை சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் .  இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது .

Maharashtra sivasena leader sanjay rawath criticized mathya pradesh political and criticized bjp 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சிவசேனா மூத்த தலைவரும் எம்பியுமான  சஞ்சய் ராவத் ,  இந்தப்பிரச்சினையை கரோனா வைரசுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார் .  அதில் மத்திய பிரதேசத்தில்  நுழைந்திருக்கும் வைரஸ் மகாராஷ்டிராவில் உள்ளே நுழையாது ,  மகாராஷ்டிராவில் நடந்துவரும்  ஆட்சி வித்தியாசமானது .  100 நாட்களுக்கு முன்னர் ஒரு அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்தது ,  இதையடுத்து மகா விகாஸ் அகாடி பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு  மாகாராஷ்டிராவை காப்பாற்றியது .  சிவசேனா கூட்டணி அரசு பாதுகாப்பாக உள்ளது எனக் கூறினார்.

Maharashtra sivasena leader sanjay rawath criticized mathya pradesh political and criticized bjp

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவார் ,  மத்திய பிரதேசம் போன்ற சூழ்நிலை மகாராஷ்டிராவில் இல்லை,   மகா விகாஸ் அகாடி கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது .  அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது ,  உண்மை என்னவென்றால் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக  ஊடகங்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை,  அப்படியென்றால் எல்லாம் சரியாக நடக்கிறது என்றுதானே அர்த்தம் என்றார் அவர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios