Asianet News TamilAsianet News Tamil

​​​யுடர்ன் அடிக்கும் மஃபா பாண்டியராஜன்..? விருதுநகரை குறிவைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரம்..!

மாஃபா பாண்டியராஜன் திமுகவிற்கு தாவுகிறாரா..? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்! இன்னொரு இனோவா சம்பத் என கமெண்ட் அடிப்பவர்களின் வாயை ஒரே ட்விட்டில் மூட வைத்துள்ளார். 

Mafa Pandiyarajan beating Utern ..? Acharam for the parliamentary election targeting Virudhunagar ..!
Author
Tamil Nadu, First Published Dec 12, 2021, 1:40 PM IST

மாஃபா பாண்டியராஜன் திமுகவிற்கு தாவுகிறாரா..? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்! இன்னொரு இனோவா சம்பத் என கமெண்ட் அடிப்பவர்களின் வாயை ஒரே ட்விட்டில் மூட வைத்துள்ளார். சமீபகாலமாக அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி, தனது தொழிலை கவனித்து வந்தார். ஓ.பி.எஸ் ஆதரவாளர், அதனால் ஓரம் கட்டப்பட்டார். ஓ.பி.எஸ் ஓரம் கட்டப்படுவதால் மஃபா ஒதுங்கி விலகுகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த நிலையில் திமுக அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்ட பாரதியாரின் பிறந்த நாள் விழாவில் திடீரென கலந்து கொண்டார் மஃபா பாண்டியராஜன்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே மஃபா பாண்டியராஜன் திமுகவில் இணைய இருக்கிறார் என செய்திகள் உலா வந்தன. ( கவனிக்கவும். அந்த விழாவில் சேகர் பாபு காவி வேட்டி அணிந்திருக்க, மஃபா பாண்டியராஜன் அதிமுக கரை வேட்டி அணிந்தே வந்திருந்தார்)

Mafa Pandiyarajan beating Utern ..? Acharam for the parliamentary election targeting Virudhunagar ..!


அந்த விழாவில் பேசிய மஃபா பாண்டியராஜன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அவர் பேசியது ‘’2 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்’’ என புகழ்ந்து பேசினார். 

அவர் புகழ்ந்து பேசியதற்கும் காரணம் உண்டு. அதீத பக்தி கொண்டவர் மஃபா பாண்டியராஜன். 2 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டதை அவர் வரவேற்பதாகவே அந்த பேச்சு அமைந்திருந்ததாக கூறுகிறார்கள்.  

இதனையடுத்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ’’வசை பாடுபவர்களையும் வாழ்த்தச் செய்யும் அரசாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருகிறது.  தவறு செய்வது தன்னுடைய கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் உடனடியாக திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல, நீதிபதிகள் பாராட்டும் அரசாக தமிழக அரசு உள்ளது’’ எனப்பேசினார்.  தன் துறையை பாராட்டிய முன்னாள் அமைச்சர் எதிர்கட்சியை சேர்ந்த ஒருவர் பேசிய பேச்சை அப்படியே மடை மாற்றி, இந்த ஆட்சியையே மஃபா பாண்டியராஜன் பேசியதாக பில்டஃப் கொடுத்து விட்டார் அமைச்சர் சேகர் பாபு.  Mafa Pandiyarajan beating Utern ..? Acharam for the parliamentary election targeting Virudhunagar ..!

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் விரைவில் திமுக இணைய உள்ளதாக தகவல் வெளியாகின. இதனால், அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டார் மஃபா.  

’’புரட்சித்தலைவியின் அன்பாலும், ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டு 12/6/13 அன்று கழகத்தில் இணைந்த நாள் முதல் இன்று வரை அதிமுகவின் விசுவாசத் தொண்டனாக பணியாற்றி வருகிறேன் !அம்மா எனக்குத் தந்த உயர்வுகளை என்றும் மனதில் ஏந்தி இறுதி மூச்சு வரை EPS/OPS தலைமையில் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவேன்’’ எனத் தெரிவித்து விட்டார். Mafa Pandiyarajan beating Utern ..? Acharam for the parliamentary election targeting Virudhunagar ..!

இதில் டெயில் பீஸ் என்ன தெரியுமா..?

தொழிலதிபராக இருந்த மாஃபா பாண்டியராஜன், அரசியல்வாதியாக அரிதாரம் பூசியது விருதுநகரில். தேமுதிகவில் சேரும் முன்பே விருதுநகரில் தனது அலுவலகத்தைத் திறந்து செயல்பட ஆரம்பித்தவர், பிறகு அக்கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு எம்எல்ஏவும் ஆனார். பிறகு அதிமுகவில் சேர்ந்து அமைச்சரானார். அதன் பிறகு முழுநேர சென்னைவாசியாக மாறிப்போன அவர் ஆவடி தொகுதியையேச் சுற்றி வந்தார். இந்த நிலையில், இப்போது மீண்டும் தனது மாஃபா நிறுவனத்துக்கு விருதுநகரில் ஓர் அலுவலகம் திறந்திருக்கிறார். அடுத்த பாராளுமன்றத் தேர்தலை குறிவைத்து அண்ணாச்சி களமிறங்கிவிட்டார் என்கிறார்கள் விருதுநகர்காரர்கள்.

அவர் அதிமுகவில் இருந்து தனது சொந்த ஊரான விருதுநகரில் மக்களவை தேர்தலில் வேட்பாளராக களமிறங்க குறி வைத்துள்ளார்’’ என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios